செவ்வாய், 20 செப்டம்பர், 2016

இந்தியாவின் முதல் 'லிஃப்ட்

*இந்தியாவின் முதல் 'லிஃப்ட்'*

🛩மேற்கு வங்க மாநிலத்தில் ஆளுனர் மாளிகை ராஜ் பவனில், இந்தியாவின் முதல் லிஃப்ட் அமைக்கப்பட்டது. அது ஆளுனர் மாளிகையில் உள்ள வீட்டினுள் உள்ளது. 

🛩இந்தியாவில் முதன்முதலில் அமைக்கப்பட்ட லிஃப்ட், இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது

🛩கொல்கத்தாவில் அமைந்துள்ள 'ராஜ் பவன்', 27 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாரம்பர்ய கட்டிடமாக போற்றப்படும் இந்த மாளிகை, 1803 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும்.

🛩கொல்கத்தா ராஜ் பவனில், ஓடிஸ் எலிவேட்டர் நிறுவனம் இந்தியாவின் முதல் லிஃப்டை 1892 இல் நிறுவியது. பலதலைமுறை வைஸ்ராய்கள், பெங்காலின் ஆளுனர்கள் இங்கு இருந்துள்ளனர்.

🛩பிரிட்டிஷ் காலம் முதல் சுதந்திர இந்தியா வரை இன்றும் இந்த லிஃப்ட் வேலை செய்வது ஆச்சர்யமான ஒன்றுதான். 

🛩பழைமை வாய்ந்த இந்த எலிவேட்டர், 1969 ஆம் ஆண்டில் புதுபிக்கப்பட்டது மற்றும் அண்மையில், 2010 ஆம் ஆண்டிலும் புனரமைக்கப்பட்டது.

🛩இன்றளவும் அந்த வரலாறு சிறப்புமிக்க லிஃப்ட் தொடர்ந்து செயலபட்டுவருவது நம் எல்லாருக்கும் பெருமிதம் தரும் விஷயமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக