வியாழன், 16 மார்ச், 2017

ஆசிரியர் தேர்வுக்கான  விடைகள் 003.

ஆசிரியர் தேர்வுக்கான  விடைகள் 003.

இந்திய அரசியலமைப்பு

1. இந்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய சிவிலியன் விருதான பாரத ரத்னா எந்த ஆண்டு முதல் வழங்கப்படுகிறது - 1954

2. இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? - சமுத்திர குப்தர்

3. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற ஆண்டு? - 1946

4. பாராளுமன்றத்தில் நிதி மசோதா முதலில் எங்கு தாக்கல் செய்யப்படும்? - லோக் சபா

5. ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? - 6 ஆண்டுகள்

6. குடியுரிமைகளைப் பெறும் தகுதிகளைக் குறிக்கும் சட்டம் எப்போது நிறைவேற்றப்பட்டது? - 1955-ம் ஆண்டு

7. இந்தியாவின் தலைமை கணக்கு தணிக்கையாளரை நியமிப்பவர் யார்? - ஜனாதிபதி

8. மூட நம்பிக்கைகளுக்கெதிராக சட்டம் இயற்றிய மாநிலம் - மகாராஸ்டிரா

9. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது - தேசிய வளர;ச்சிக்குழு

10. சட்டம் இல்லையேல் சுதந்திரம் இல்லை என்று கூறியவர் - லாஸ்கி

11. இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அறிமுகப்படுத்தபட்ட ஆண்டு எது ? - 1959

12. இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன? - 12 அட்டவணைகள்

13. இந்தியாவில் மிக உயர்ந்த நீதித்துறை அங்கமாக கருதப்படுவது எது? - உச்சநீதிமன்றம்

14. வரதட்சணை தடைச்சட்டம் எந்த ஆண்டு கொண்டு வரப்பட்டது? - 1961

15. குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது என்ன? - 35

இந்திய அரசமைப்பு வரலாறு :

இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.

நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.

நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.

டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.

டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.

அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப்பட்டது.

இந்திய மக்களின் வாக்குரிமையை 21 வயதிலிருந்து 18 வயதிற்கு குறைத்த பிரதமர் - ராஜிவ் காந்தி.

📌📌📌📌📌📌📌📌📌
எந்த ஆசிய சுற்றுலாதளத்தில் அதிக இந்து மதம் சிற்பங்கள் உள்ளது?
இந்தோனேஷியாவில் உள்ள பாலியில்

சிங்கப்பூர் பண்டைய காலப்பெயர் என்ன?
துமாசிக் இது உள்ள கடல் நகரம் என்று பொருள்படும்.

எந்த வளைகுடாவிற்காக கியூபா மற்றும் அமெரிக்க நாடுகள் உடன்படிக்கை செய்து கொண்டன?
குவாண்டனமோ வளைகுடா

தமிழ்நாட்டின் ரயில்வே பாதையின் நீளம் எவ்வளவு?
5952 கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின் மொத்த ரயில் நிலையங்கள் எத்தனை?
532

தமிழ்நாட்டில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன?
24

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எப்பொழுது தொடங்கப்பட்டது?
1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டின் முக்கிய பெரிய துறைமுகங்கள் ?
தூத்துக்குடி, சென்னை, எண்ணூர் துறைமுகங்கள்

தமிழ்நாட்டின் பன்னாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(அண்ணா), திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் உள்நாட்டு விமான நிலையங்கள் எங்கு, எங்கு அமைந்துள்ளன ?
சென்னை(காமராஜ்), மதுரை, தூத்துக்குடி, சேலம்

ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழ்நாட்டில் எங்கு உள்ளது?
சென்னைக்கு அருகில் ஆவடியில்

பொதுத்துறை நிறுவனமான மாநில தொழில் மேம்பாட்டுக் கழகம்(SIPCOT) எப்பொழுது தொடங்கப்பட்டது
1972 ஆம் ஆண்டு

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் மட்டும் எத்தனை?
12,115 ( 2013 வரை )

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் மற்றும் தந்தி அலுவலகங்களின் எண்ணிக்கை ?
3504 ( 2013 வரை )

தமிழ் எந்த ஆண்டு ஆட்சி மொழியாக கொண்டுவரப்பட்டது ?
1958

தமிழ்நாட்டின் மொத்த நிலப்பரப்பு ?
1,30,058 சதுர கிலோமீட்டர்கள்

தமிழ்நாட்டின் மாநிலப் பூ ?
செங்காந்தள் மலர்

தமிழ்நாட்டின் மாநில விலங்கு ?
வரையாடு

தமிழ்நாட்டின் மாநில மரம்
பனை மரம்?

தமிழ்நாட்டின் மிக உயர்ந்த சிகரம்?
தொட்டபெட்டா

இந்தியாவின் நீளமான ஆறு எது?
கங்கை.

இந்தியாவின் நீளமான இரண்டாவது ஆறு எது?
கோதாவரி ஆற்றின்.

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மொழியில் எப்படி அழைக்கப்படுகிறது?
யார்லுங் ட்சாங்போ(Yarlung Tsangpo)

ஹிராகுட் அணை எந்த ஆற்றின் மேல் கட்டப்பட்டது?
மகாநதி ஆறு.

எந்த ஐந்து ஆறுகள் இணைந்து சிந்து நதி உருவாகிறது?
ஜீலம், செனாப், ரவி, பியாஸ் மற்றும் சட்லெஜ்.

தக்ஷிண் கங்கா என்றழைக்கப்படும் ஆறு
கோதாவரி ஆறு.

1600 ஆண்டுகளுக்கு முன் ஆணை எந்த நதியில் யாரால் கட்டப்பட்டது ?
கல்லணை, கரிகாலனால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டது

📌📌📌📌📌📌📌📌📌
1. சேர்வலாறு அணைக்கட்டு எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
திருநெல்வேலி 

2. இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது? கிளை வங்கி முறை

3. அப்பள தயாரிப்புக்கு பெயர்பெற்ற இடம் எது? கல்லிடைக்குறிச்சி

4. தமிழ்நாட்டின் சர் வால்டர் ஸ்காட் என அழைக்கப்பட்டவர் யார்?
கல்கி

5. இந்தியாவில் நீளமான கோயில் பிரகாரம் எங்குள்ளது? ராமேசுவரம் கோவில், 14,000 அடி

6.  I.Q. என்பதன் விரிவாக்கம் என்ன? Intelligent Quotient 

📌📌📌📌📌📌
1. எம்பயர் நகரம் என அழைக்கப்படும் நகரம் எது? நியூயார்க்

2. போஸ்டல் இண்டக்ஸ் எண் எனப்படும் பின்கோடு முறை எப்போது
தொடங்கப்பட்டது? 15.8.1972

3. பெரிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் விருது எது?
மகாரத்னா

4. தெலங்கானா தனிமாநிலம் அமைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவின் தலைவர் யார்? ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.கிருஷ்ணா

6.  அடிப்படை உரிமைகள், இந்திய அரசியலமைப்பின் மனசாட்சி என வர்ணித்தவர் யார்? ஜவஹர்லால் நேரு 

📌📌📌📌📌📌📌📌📌
1. மஞ்சள் புரட்சி தொடர்புடையது எது? எண்ணெய் வித்துக்கள்

2. நபார்டு (NABARD) வங்கி எப்போது ஆரம்பிக்கப்பட்டது? 1982-ல்

3. அரிசி அதிகளவு உற்பத்தி செய்யப்படும் மாநிலம் எது? மேற்கு வங்காளம்

4. இந்தியாவின் தேசிய மலர் எது? தாமரை

5. நாளந்தா பல்கலைக்கழகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? பிஹார்

6. டங்சா என்ற பழங்குடியினர் எந்த மாநிலத்தில் வாழ்கிறார்கள்?
அருணாச்சலப் பிரதேசம் 

📌📌📌📌📌📌📌
1. இந்திய குடியரசு தின விழாவில் முதல்முறையாக பங்கேற்ற வெளிநாட்டு ராணுவம்?. பிரெஞ்சு

2. ரேடியோ அலைகள் ஒரு விநாடியில் எவ்வளவு தூரம் பயணம் செய்யும்?
சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்

3. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை எவ்வளவு? 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958

4. பீடி தொழிலாளர்களின் குடும்பத்துக்கான இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் பெயர் என்ன? ராஷ்ரிய சுவாஸ்திய பீமாயோசனா

6.  வெண்மை புரட்சி எதனுடன் தொடர்புடையது? பால் மற்றும் முட்டை 

📌📌📌📌📌📌📌
1. 2017 ல் - இந்தியாவில் கொண்டாட்ட குடியரசு தினம்? 68வது

2. பின்வரும் நகரங்களில் எது ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் முதல் 20 நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது? புவனேஸ்வர்

3. 2016 ல் - இந்தியா எந்த நாட்டில் செயற்கைகோள் கண்காணிப்பு மையத்தை நிறுவியது? வியட்நாம்

4. ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிநபர் நீதித்துறை கமிஷன் தலைவர்?
அசோக் குமார் ரூபன்வால்

📌📌📌📌📌📌📌
1. இந்தியாவில் உயிர்நாடி கிராமங்கள் என்று குறிப்பிட்டவர் காந்தியடிகள் 

2. 2016 ல் - இந்தியாவின் எந்த மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சி
அமுல்படுத்தப்பட்டது? அருணாசலப் பிரதேசம்

3. சர்வதேச சூரிய கூட்டணி[International Solar Alliance (ISA)]அமைப்பின் தலைமை
அலுவலகம் அமையபோகும் மாநிலம்? குர்கான்

4. பின்வரும் நாடுகளில் எது 2016-ல் 19 வயதுக்கு உட்டபட்டோருக்கான உலக
கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தப்போகிறது? வங்காளம்

5. ஒரு நற்குடிமகன் பெற்றிருக்க வேண்டியது தேசபக்தி, சகிப்புத்தன்மை, நற்கல்வி

6. பொளத்தர்கள் கொண்டாடுவது புத்த பூர்ணிமா

7. இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கார் 

8. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் 22

9. சத்யமேவஜெயதே முதலில் எழுதப்பட்ட மொழி தேவநாகரி 

10. மருது சகோதரர்கள் ஆட்சி புரிந்த பாளையம் சிவகங்கை 

11. இந்திய தேசியச் சின்னம் பின்வரும் கட்டிடகலை படைப்பிலிருந்து
எடுக்கப்பட்டது ? சாரநாத் கல்தூண்

12. பஞ்சாப் சிங்கம் என அழைக்கப்படுபவர் ? லாலா லசபதிராய் 

13. சோழர்களின் சின்னம் ?புலி

14. வங்கப்பிரிவினை நடந்த ஆண்டு 1905

15.  மொகஞ்சதாரோ என்பதன் பொருள் இறந்தவர்களின் நகரம் 

                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக