செவ்வாய், 14 மார்ச், 2017

உலக pye தினம்-மார்ச் 14 :



உலக pye தினம்-மார்ச் 14 :


பள்ளிப்படிப்பின் கணித சமன்பாடுகளை கடந்து வந்தவர்கள் யாரும் "பை" எண்ணும் கணித மாறிலியை உபயோக்கிக்காமல் கணக்குகளை தீர்த்திருக்கவே முடியாது. 3.14 என்ற மதிப்பை கொண்டுள்ளதால் ஆங்கில மூன்றாவது மாதமான மார்ச் 14 அன்று "உலக பை" தினமாக கொண்டாடப்படுகிறது. பை நாள்: "பை நாள்" மற்றும் "பை எண்ணளவு நாள்" என்பன 'π' என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். மாறிலியின் மதிப்பு: ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது எண்ணளவாக பையையும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926). ஐரோப்பாவில் ஜூலை 22: பை எண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் (பையின் பரவலாக அறிந்த பின்ன எண்ணளவு 22/7 ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. கலிபோர்னியாவில் முதல் பை நாள்: பை நாள் முதன்முறையாக 1988 இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் தொழில் நுட்ப சாலையான எக்ஸ்புளோடோரியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் அத்தொழில்நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. பை இனிப்புடன் முடிந்தது: அணிவகுப்பின் முடிவில் பை (Pye)எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது.


*பை* தின வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக