வெள்ளி, 3 மார்ச், 2017

சொல் இலக்கணம்:-


சொல் இலக்கணம்:-

🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ  பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

போலிகள் மற்றும் எழுத்துக்கள் பிறப்பிடம் பற்றிய சில தகவல்கள்:-
போலிகள்:-
☔ போலிகள் வகைகள் - 3
1. முதற்போலி
(எ.கா.)மயல் - மையல்
2. இடைப்போலி
(எ.கா.) அரசன் - அரைசன்
3. கடைப்போலி - நிலம் - நிலன்

எழுத்துக்கள் பிறப்பு வகைகள் - 2
1. இடப்பிறப்பு
2. முயற்சிப் பிறப்பு
🦋 எழுத்து தோன்றுகின்ற மார்பு முதலானவற்றை இடப்பிறப்பில் அடக்குவர்.
🦋 உதடுகள் போன்ற உறுப்புகளின் தொழில் வேறு பாட்டானால் ஒலிப்பது - முயற்சி பிறப்பு

🦄மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🚀 வல்லினம் பிறக்கும் இடம் - மார்பு
🚀 மெல்லினம் பிறக்கும் இடம் - மூக்கு
🚀 இடையினம் - கழுத்து

🦄முதலெழுத்துக்களின் முயற்சி பிறப்பு:
🖊 வாயை அகலமாக திறந்தால் ஒலிப்பது - அ, ஆ
🖊 வாயை திறப்பதோடு மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவதால் ஒலிப்பது - இ,ஈ,எ,ஏ,ஐ
🖊 உதடுகளை குவித்து ஒலிப்பது - உ,ஊ,ஒ,ஓ,ஔ
🖊 நாவினது முதற்பகுதி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - க், ஞ்
🖊 நடுநா, நடு அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - ச், ஞ்
🖊 நுனிதா, நுனி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - ட், ண்
🖊 மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் ஒலிப்பது - த், ந்
🖊 மேல் உதடு, கீழ் உதடு பொருந்துவதால் ஒலிப்பது - ப், ம்
🖊 நாக்கின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருத்துவதால் ஒலிப்பது - ய்
🖊 மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் ஒலிப்பது - ர், ழ்
🖊 மேல் வாய்ப்பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதால் ஒலிப்பது - ல்
🖊 மேல்வாய் நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதால் ஒலிப்பது - ள்
🖊 மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதால் ஒலிப்பது - வ்
🖊 மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் ஒலிப்பது - ற், ன்

ஐகாரகுறுக்கம், ஔகாரகுறுக்கம், மகரகுறுக்கம் (மற்றும்) ஆய்தகுறுக்கம்  பற்றிய சில தகவல்கள்:-
ஐகாரக் குறுக்கம்:-
☔ ஐகாரக் குறுக்கம் தனித்து ஒலிக்கும் போது இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்.
☔ சொல்லுக்கு முதலிலும், இடையிலும், இறுதியிலும் வரும் போது தன் ஓசையில் குறைந்து ஒலிக்கும்.
(எ.கா.) ஐந்து - மொழிக்கு முதலில் 'ஐ' குறுகியது
மடையன் - மொழிக்கு இடையில் 'ஐ' குறுகியது
தவளை - மொழிக்கு இறுதியில் 'ஐ' குறுகியது.

ஔகாரக் குறுக்கம்:
☔ 'ஔ' என்னும் எழுத்து தனித்து ஒலிக்கும் போது இரண்டு மாத்திரை அளவு ஒலிக்கும்.
☔ சொற்களில் வரும்போது, தனக்குரிய இரண்டு மாத்திரையினின்று குறைந்து ஒலிக்கும் இது 'ஔகார குறுக்கம்'
☔ மொழிக்கு இடையிலும், இறுதியிலும் 'ஔ' காரம் வராது.
☔ மொழிக்கு முதலில் மட்டுமே வரும்
(எ.கா.) ஔவையார்

மகரக்குறுக்கம்:
☔ 'ம்' என்னும் மெய்யெழுத்து தனது அரை மாத்திரையிலிருந்து குறைந்து, கால் மாத்திரை அளவாய் ஒலிக்கும். இது 'மகரக்குறுக்கம்' எனப்படும்.
(எ.கா.) மருண்ம், போன்ம்

ஆய்தக் குறுக்கம்:
☔ ஆய்த எழுத்து தன் மாத்திரையிலிருந்து குறுகி ஒலிப்பது "ஆய்தக் குறுக்கம்" எனப்படும்.
(எ.கா.) அல் + திணை = அஃறிணை

எழுத்து இலக்கணம் பற்றிய சில விரிவான தகவல்கள் :-
எழுத்து இலக்கணம்:-
🐔 மொழிக்கு முதற் காரணமாகவும், அணுத்திரளின் காரியமாகவும் அமைந்து, காதால் கேட்கப்படும் ஒலியே எழுத்து எனப்படும்.
🐔 எழுத்துக்கள் வடிவம் இரு வகைப்படும். அவைகள் 1. ஒலி வடிவம், 2. வரி வடிவம்
1. ஒலி வடிவம் - வாயால் உச்சரிக்கப்படுவதும், காதால் கேட்கப்படுவதுமாகிய எழுத்து 'ஒலி வடிவம்' எனப்படும்.
2. வரி வடிவம் - கண்ணிற்குப் புலனாகும்படி எழுதப்படுவது 'வரி வடிவம்' ஆகும்.
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2  (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

1. உயிர்மெய்:
☔ உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துகளும் சேர்த்து பிறக்கும் எழுத்துக்கள் - உயிர்மெய்
☔ உயிர்மெய் எழுத்துக்கள் - 216
☔ உயிர்மெய் எழுத்துக்களில் குறுகிய ஓசையுடையவை - உயிர்மெய் குறில்
☔ உயிர்மெய் குறில் எழுத்துக்கள் மொத்தம் - 108
☔ உயிர்மெய் எழுத்துக்களில் நீண்ட ஓசையுடையவை - உயிர்மெய் நெடில்
☔ உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் மொத்தம் - 108
2. ஆய்தம்:
☔ மூன்று புள்ளி (ஃ) வடிவினதாய் அமைந்த எழுத்து 'ஆய்த எழுத்து'
☔ கேடயம் என்னும் ஆய்தத்தில் அமைந்துள்ள மூன்று ஆணிகளைப் போன்று இது உள்ளதால் இது ஆய்த எழுத்து எனப் பெயர் பெற்றது.
☔ ஆய்த எழுத்ததின் வேறு பெயர்கள் - தனிநிலை, ஒற்று, முப்பாற் புள்ளி
☔ சுட்டெழுத்து மொத்தம் - 3 (அ, இ, உ)
☔ சுட்டெழுத்து வகைகள் - 2
1. அகச்சுட்டு
2. புறச்சுட்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக