ஞாயிறு, 12 ஜனவரி, 2020

019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1



2019.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. விருதுகளை அள்ளிச் சென்றவர்கள்..!!

2019 - இந்திய விருதுகள் ஓர் பார்வை..! - பகுதி-1
கல்வி, விண்வெளி, இராணுவம், விளையாட்டு... மேலும் இதுபோன்று ஒவ்வொரு துறையிலும் சாதிப்பவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றன.

கடந்த 2019ஆம் வருடத்தில் எந்தெந்த துறைகளில் எவரெல்லாம் சாதனை படைத்தார்கள்? என்பதைப் பற்றி தெளிவாக காண்போம்..!

நேபாள நிலநடுக்கத்தில் சிக்கிய ஸ்பெயின் மக்களை இந்திய மீட்பு படையினர் காப்பாற்றியதற்காக, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு, உயரிய விருதான கிராண்ட் கிராஸ் விருதை வழங்கி ஸ்பெயின் அரசு கௌரவித்தது.

வன விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாத்ததற்காக வழங்கப்படும் சர்வதேச விருதான 'உலகளாவிய எதிர்காலத்திற்கான இயற்கை விருது 2019" இந்தியாவின் திவ்யா கர்னாடு (னுiஎலய முயசயென) என்பவருக்கு வழங்கப்பட்டது.

மருத்துவ சேவையில் சிறப்பாக பணியாற்றியதற்காக மதுரை மருத்துவர் அமுதகுமாருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளின் பெயர்களை கூறும் 2 வயது சிறுமி காவ்யஸ்ரீக்கு, மெடல்ஸ் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பு, உலக சாதனை விருது வழங்கி கௌரவித்தது.

கனடாவின் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தால் வழங்கப்படும், வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, கனட திரைப்படத் தயாரிப்பாளர் தீபா மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குஜராத்தில் அமைந்துள்ள, சர்தார் படேல் சிலையை வடிவமைத்த ராம் வான்ஜி சுதார் உட்பட மூவருக்கு கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான தாகூர் விருது வழங்கப்பட்டது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் அருகில் 20 மீட்டர் தொலைவில் இருந்து 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்திய மேஜர் துசார் கவுபாவுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது.

ஆசியாவின் நோபல் விருது என்று கருதப்படும் மகசேசே விருதை இந்திய ஊடகவியலாளர் ரவீஷ் குமாருக்கு வழங்கப்பட்டது.

சுற்றுச்சூழல் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மின்சார வசதிகளின் அடிப்படையில் வழங்கப்படும் 'இந்தியாவின் பசுமைக் கட்டிட விருதானது" (ஐனெயைn புசநநn டீரடைனiபெ யுறயசன) விஜயவாடா ரயில் நிலையத்திற்கு வழங்கப்பட்டது.

விமான சேவை மற்றும் விமான தரத்தின் அடிப்படையில் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள பிஜு பட்நாயக் விமான நிலையத்திற்கு 2018ஆம் ஆண்டிற்கான சிறந்த விமான நிலையம் என்ற விருது வழங்கப்பட்டது.

தன் வீட்டிற்குள் நுழைய முயன்ற பயங்கரவாதியை அடித்து விரட்டிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த, 16 வயது சிறுவன் இர்பான் ரம்ஜான் ஷேக்குக்கு, சவுர்யா சக்ரா விருது வழங்கப்பட்டது.
ஸ்வச் சர்வேக்ஷன் விருது 2019
தூய்மையான நகரங்கள் பட்டியலில், மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது. 2-வது இடத்தை சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் நகரமும், 3-ம் இடத்தை கர்நாடகத்தின் மைசூரும் பெற்றுள்ளது.

சிறிய நகரங்களில் தூய்மையான நகரத்திற்கான விருது தில்லி நகராட்சி நிர்வாகத்திற்கும், பெரு நகரங்களில் தூய்மையான நகரத்திற்கான விருது குஜராத்தின் அகமதாபாத்திற்கும், போபால் நகரத்திற்கு சிறந்த தூய்மையான தலைநகரம் என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது.

சிறந்த கங்கை நகரத்திற்கான விருது உத்தரகாண்ட் மாநிலத்தின் கௌசார் நகரத்திற்கு வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக