திங்கள், 20 ஜனவரி, 2020

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்... எப்படி வந்தது?.. என்ன நடந்தது?...



இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்... எப்படி வந்தது?.. என்ன நடந்தது?...

ஆரியபட்டா செயற்கைக்கோள்..!!
🚀ஆரியபட்டா என்பது இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும். இந்தியாவில், வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் நினைவாக முதல் செயற்கைக்கோளுக்கு இவருடைய பெயர் சூட்டப்பட்டது.

🚀முற்றிலும் இந்தியாவிலேயே தயாரித்து, சோவியத் யூனியனின் உதவியுடன், 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி ஆரியபட்டா செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இதுவே, இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆகும்.

🚀இதன் எடை 360கிகி ஆகும். சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டின் யார்(முயிரளவin லுயச) ஏவுதளத்தில் இருந்து கொஸ்மொஸ்-3எம் என்ற ஏவுகலன் மூலம் செலுத்தப்பட்டது.


🚀ஆரியபட்டா பூமியில் இருந்து சுமார் 619 கி.மீ உயரத்தில் பறந்து வந்தது. எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது. செயற்கைக்கோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக்கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

🚀ஆரியபட்டா செயற்கைக்கோள், இந்திய வானிலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, விண்ணில் ஏவப்பட்டது. இதற்காக, பெங்கள+ருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் மாற்றம் செய்யப்பட்டு, தரை கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டது.

🚀ஆரியபட்டாவின் வெற்றியை நினைவுகூறும் விதமாக, அப்போதைய சோவியத் யூனியன் அரசு சிறப்பு தபால் தலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


செயற்கைக்கோளின் சிறப்பு :

🚀ஏப்ரல் 19, 1975ல், செயற்கைக்கோளின் 96.46 நிமிட சுற்றுப்பாதையில் 619 கிலோமீட்டர் (385 மைல்) சேய்மைநிலையிலும், 563 கிலோமீட்டர் (350 மைல்) அண்மைநிலையிலும், 50.7° சாய்வில் இருந்தது.

🚀இது எக்ஸ்ரே வானியல், வானியல் மற்றும் சூரிய இயற்பியலில் சோதனைகளை மேற்கொள்ள கட்டப்பட்டது. விண்கலம் 26 பக்க பாலிஹெட்ரான் 1.4 மீட்டர் (4.6 அடி) விட்டம் கொண்டது.

🚀அனைத்து முகங்களும் (மேல் மற்றும் கீழ் தவிர) சூரிய மின்கலங்களால் மூடப்பட்டிருந்தன.

🚀விண்கலம் மெயின்பிரேம் 1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை செயலில் இருந்தது. சுற்றுப்பாதை சிதைவு காரணமாக செயற்கைக்கோள் 11 பிப்ரவரி 1992ல் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து விழுந்தது.


🚀செயற்கைக்கோளின் படம் 1976 மற்றும் 1997க்கு இடையில் இந்திய இரண்டு ரூபாய் நோட்டில் தலைகீழாக தோன்றியது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக