வெள்ளி, 24 ஜனவரி, 2020

இந்திய தேசிய கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்


இந்திய தேசிய கொடி பற்றிய சில சுவாரசிய தகவல்கள்.
   
சுதந்திர இந்தியாவின் அடையாளமாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர்மூச்சாக பட்டொளி வீசும் இந்திய தேசிய கொடி பற்றிய சுவாரசிய தகவல்கள் இதோ உங்களுக்காக…

தேசபிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களும் லட்சகணக்கான மக்களும் கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஆங்கிலேயரிடம் போராடி, ஆகஸ்டு 15 1947 ஆண்டு சுதந்திரம் பெற்றதால் தான், இன்று நாமும் நம் சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

இப்படி போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாக உருவானது தான், நம் இந்திய தேசியக் கொடி

தேசிய கொடியில் காவி, வெண்மை பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணகொடி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இம்மூன்று வண்ணத்திற்கும் ஒரு காரணம் உண்டு.

காவி நிறம் – பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதற்காகவும்,

வெண்மை நிறம் – உண்மை மற்றும் அமைதியையும்.

பச்சை நிறம் – வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.

நடுவில் 24 ஆரங்களை கொண்டு இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், கடல் மற்றும் மேகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும், குறிப்பாக தர்மம் காக்கபட வேண்டும் என்ற நிலைபாட்டில் அமைந்துள்ளது.

ஆனால் இவ்வளவு சிறப்புமிக்க தேசிய கொடி உருவாக்கத்திற்கு மிக பெரிய வரலாற்று பின்னனியெ இருக்கிறது….

1947ல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், ராஜேந்திர பிரசாத்தை தலைவராகவும், மவுலானா அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலச்சாரி, கே.எம். முன்ஷி, மற்றும் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரையும் குழு நபர்களாக கொண்ட ஒரு அவசர அமைப்பு முத்த தலைவர்கள் மேற்பார்வையில் அமைக்கபட்டது.

இந்த அமைப்பு, பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் நாட்டை ஒரே தேசம் என்ற அடிப்படையிலும், உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தவும் தேசத்திற்கு ஒரு கொடி வேண்டும் என்று தீர்மானித்தது. அதன் தொடக்கமாக பல கொடிகள் உருவாகபட்டு ஒவ்வொறு முறையும் பல திருத்தங்கள் மேற்கொள்ளபட்டது. அப்படி நடந்த புரட்சியில் தேசிய கொடி மொத்தம் 22 முறை மாற்றி அமைக்கபட்டது.

இறுதியாக காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில், ஒரே அளவில் இருக்கும் பட்டைகளோடு, நடுவில் உள்ள வெள்ளைப் பட்டையில் அசோக சக்கரம் தாங்கிய கொடி இருக்க வேண்டும் என்றும் அக்கமிட்டி முடிவெடுத்தது.

23 ஜூன் 1947 அன்று தொடங்கிய இவ் விவாதத்தில், கொடியின் மாதிரி வடிவம் ஒன்று தயாரிக்கப்பட்டு, 1947ம் ஆண்டு ஜூலை மாதம் 22ம் தேதி அரசியல் சட்ட நிர்ணய சபையின் முன் அதன் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், எந்த மத சாயலும் இல்லாமல் தேசியக் கொடி இருக்க வேண்டும் என்று சில நிபந்தனைகளையும் அக்கமிட்டி நிர்னயித்தது.

இறுதியாக பிங்காலி வெங்கய்யா வடிவமைத்த இந்திய விடுதலைக்காக பெரிதும் பங்காற்றிய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடி அடிப்படையாக மாதிரியாக எடுக்கபட்டது. இந்த கொடியில் சில மாற்றங்கள் செய்யபட்டு அதுவே இந்திய தேசிய கொடியாக அக்கமிட்டி அறிவித்தது.

இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய தேசியக் கொடியை, நாடு சுதந்திரம் அடைந்த ஆகஸ்ட் 15, 1947ஆம் தேதி டெல்லியில் உள்ள கோட்டைக் கொத்தளத்தில் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஆங்கிலேயர் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றினார்.

பின் 1951-ஆண்டு இந்திய தரக்கட்டுப்பாட்டுத் துறையால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவு முறையானது கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கிறது. முக்கியமாக கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது, மிகப்பெரிய குற்றமாக கருதபடும்.

மேலும் கொடியை பருத்தி, பட்டு இவற்றில் ஒன்றால் கையால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியில் தான் தயாரிக்க வேண்டும் என்பதும் சட்டமானது. தேசியக் கொடிக்கு உரிய மரியாதை செய்ய இந்திய தேசியக் கொடி சட்டம், 2002 இயற்றபட்டது. பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் தண்டனைக்குரிய குற்றமாகும், மேலும் தேசியக் கொடியை மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது.

கொடி கிழிந்த நிலையிலோ, நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது என்று சட்டம் இயற்றப்ப்ட்டது. அதுமட்டுமிலாமல் சூரிய உதயத்திற்கு பின்பு தேசியக் கொடியை ஏற்றவும் , சூரிய அஸ்தமனத்திற்குள் தேசியக் கொடியை இறக்கி விடவேண்டும் என்றும், தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படுவது என பல கடுமையான சட்டங்கள் இயற்றப்படது.

மேலும் தேசிய கொடிக்கான அளவு விகிதாசாரமும் காலபோக்கில் நிர்னயிக்கப்ட்டது. எ.கா டெல்லி செங்கோடடையில் 8 * 12 அடியும் என்ற் அள்விலும், டெல்லி பாராளுமனறத்தில் 6 *9 அடி என்ற அளவிலும் கொடி ஏற்றப்ப்ட்டு , உரிய மரியாதை செலுத்தப்ட்டு வருகிறாது.

இன்னும் எத்தனை ஆண்டுகல் ஆனாலும் உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்ற தியாகிகளை மறவாமல் தேசத்தையும், தேசிய கொடியையும் போற்றுவோம், பாதுகாப்பொம்..

ஜெய் ஹெந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக