ஞாயிறு, 5 ஜனவரி, 2020

2019ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி-1 !


2019ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி-1 !

ஜனவரி
🎾 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா மற்றும் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

🎾 2018 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், கனவு ஒரு நாள் அணியின் கேப்டன், கனவு டெஸ்ட் அணியின் கேப்டன் என ஐந்து விருதுகளுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தேர்வு செய்தது.

🎾 ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை அவர்களின் சொந்த மண்ணில் வென்று இந்தியா சாதனை படைத்தது.

பிப்ரவரி
🏀 தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையை இலங்கை அணி பெற்றது.

🏀 காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடர்பான புகைப்படங்களை பஞ்சாப் கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

🏀 உலக மகளிர் கிரிக்கெட்டில் முதல் முறையாக 200 ஆவது போட்டியில் பங்கேற்று மிதாலி ராஜ் வரலாற்று சாதனை படைத்தார்.

மார்ச்
🎳 ஐபிஎல் போட்டிகளில் முதல் வீரராக சுரேஷ் ரெய்னா 5000 ரன்களை எட்டி சாதனை படைத்தார்.

🎳 இந்தியன் சு%2Bப்பர் லீக் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி, முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.

🎳 2020 ஆம் ஆண்டில் நடக்கவுள்ள 17 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை போட்டிகளை, இந்தியாவில் நடத்துவதற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்தது.

🎳 சர்வதேச டென்னிஸ் அரங்கில் தனது 100வது கோப்பையை வென்று ரோஜர் பெடரர் சாதனை படைத்தார்.

🎳 சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக அனில் கும்ப்ளே மீண்டும் நியமிக்கப்பட்டார்.

ஏப்ரல்
🎾 ஐபில் கிரிக்கெட் போட்டிகளில் 300 சிக்ஸர் விளாசிய முதல் வீரர் என்ற பெருமையை வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் பெற்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக