திங்கள், 6 ஜனவரி, 2020

2019-ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி 2 !


2019-ஆம் ஆண்டு : விளையாட்டு ஒரு பார்வை - பகுதி 2 !
மே
🏀 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாடல் ஒன்றை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.

🏀 ஐபிஎல் 2019 கிரிக்கெட் போட்டியில் மும்பை அணியானது முதல் இடத்தையும், சென்னை அணி இரண்டாவது இடத்தையும் பெற்றன.

🏀 பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ மரணமடைந்தார்.

🏀 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக, இந்தியாவை சேர்ந்த ஜி.எஸ்.லட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

🏀 ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்து மற்றும் ஆரோக்கிய ராஜீவ்க்கு தமிழக அரசு சார்பில் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஜூன்
🏀 உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோ ரூட் பெற்றார்.

🏀 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் நியு%2Bஸிலாந்து அணிகள் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் மோதினர்.

🏀 பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

🏀 பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரியாவின் டொமினிங் தீம்மை வீழ்த்தி ஸ்பெயினின் ரஃபேல் நடால், 12வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

🏀 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கத்திற்காக டூடுல் ஒன்றை கூகுள் நிறுவனம் வெளியிட்டது.

ஜூலை
🏀 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் பணியில் இணைந்தார்.

🏀 2019 உலகக் கோப்பைத் தொடரில் நியு%2Bசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றது.

🏀 55 வருடத்துக்குப் பிறகு இந்திய டென்னிஸ் அணி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்காக பாகிஸ்தான் சென்றது.

🏀 பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

🏀 அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ் 200 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தொடர்ச்சியாக 5 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

🏀 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆகஸ்ட்
🏀 சர்வேதச துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

🏀 பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பகத் மற்றும் மான்ஷி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

🏀 உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வென்று பி.வி.சிந்து வரலாற்று சாதனை படைத்தார்.

🏀 டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டியில் 2 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சு%2Bப்பர் கில்லீஸ் அணி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக