வெள்ளி, 3 ஜனவரி, 2020

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்


தொலைப்பேசி நாயகன்... இளமை கனவு திசைமாறியது... யார் இவர்?
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் இளமைப்பருவம்!!


🌟அலெக்ஸாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க் நகரில் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி பிறந்தார்.

🌟இவருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல், எட்வர்டு சார்லஸ் பெல் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.

🌟இவரது பாட்டனார் பெயர் அலெக்ஸாண்டர். தந்தையார் பெயர் மெல்வில்லி பெல் (ஆநடஎடைடந டீநடட) என்பதாகும். இருவரும் பேச்சுக்கலைப் பயிற்சியில் வல்லவர்கள்.

🌟குறிப்பாக கிரகாம் பெல் அவர்களின் தந்தையார், ஒலிப் பிறப்பியல் துறையில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஒலி உண்டாவதற்கு காரணமான குரல்வளை, நா, தொண்டை, உதடுகள் ஆகியவற்றின் பங்கு பற்றி விளக்கும் ஒலிப்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர்.

🌟கிரகாம் பெல் அவர்களின் தாயார் எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் (நுடளைய புசயஉந ளுலஅழனௌ) இசையில் ஆர்வம் கொண்டவர். அதுமட்டுமல்லாமல் ஓவியரும் கூட.

🌟இளம் வயதில், கிரகாம் பெல் வீட்டிலேயே கல்வி கற்று வந்தார். அப்போது தன் தாயாரிடம் இசை பயிலும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்தது. எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாக பியானோ வாசிப்பதில் வல்லவராக திகழ்ந்தார்.


🌟இந்நிலையில் அவரது தாயார் எலிசாவிற்கு கேட்கும் திறன் இழக்க நேரிட்டது. அதனால் கிரகாம் பெல் அவர்களின் இசைப்பயிற்சியும் தடைபட்டது. மேலும் பேச்சுப்பயிற்சியில் முழுமையாக ஈடுபட்டிருந்த தமது குடும்பத்தில், தன் தாய்க்கே இந்நிலை ஏற்பட்டதை நினைத்து, கிரகாம் பெல் பெரிதும் வருந்தினார்.

🌟பியானோ இசையில் பெரும் புலமை பெறவேண்டும். புகழ் பெறவேண்டும் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்த கிரகாம் பெல்லின் ஆசை அவரது தாயாரின் மறைவால் நிறைவேறாமலேயே போய்விட்டது.

🌟கிரகாம் பெல் எடின்பர்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் தனது படிப்பை தொடர்ந்தார். தாவரவியல் முதற்கொண்டு தொழில்நுட்பவியல் வரை அனைத்து அறிவியல் பாடங்களிலும் ஆர்வம் காட்டினார். அவருக்கு, பேச்சுப்போட்டி, நாடகம், இசை ஆகியவற்றிலும் பெரும் ஈடுபாடு இருந்தது.

🌟பள்ளியில் படிக்கும்போதே மற்றவர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளித்தல், இசை கற்பித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு பொருளீட்டவும் செய்தார். தனது பாட்டனார் மற்றும் தந்தையார் ஆகியோரது வழிகாட்டுதலில், பேச்சுப்போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல வென்றார்.

அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் திருமணம்!!


🌟1865ஆம் ஆண்டு மின்சாரத்தின் வழி, இடம் விட்டு இடம் பேச்சொலியை செலுத்தும் எண்ணம் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்லுக்கு தோன்றியது. இதற்கு காரணம் ஹெர்மன் ஹேய்ம்ஹோல்ட்ஸ் (ர்நசஅயn ர்நiஅhழடவண) என்பவர் எழுதிய 'வியப்பூட்டும் குரலொலி (வுhந ளுநளெயவழைn ழக வுழநெ)" என்ற நூலே.

🌟அதே ஆண்டு கிரகாம் அவர்களின் குடும்பம் லண்டனுக்கு குடிப்பெயர்ந்தது. காசநோயால் அவரது தம்பி எட்வர்ட் மறைந்ததும், குடும்பமே துயரத்தில் மூழ்கியது. 1866ஆம் ஆண்டு முதற்கொண்டு பல்வேறு ஆய்வுகளில் கிரகாம் பெல் ஈடுபட்டார்.

🌟இவையே பின்னாளில் அவர் தொலைப்பேசியை கண்டுபிடிப்பதற்கு வழிவகுத்தன எனலாம். 1870ல் அவரது அண்ணனும் காசநோய்க்கு இரையானபோது, மருத்துவர்கள் இந்நோய் கிரகாம் பெல் அவர்களையும் தாக்கக்கூடும் என்று எச்சரித்தனர்.

🌟இதனால் கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்கு குடிப்பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்தபோது 1872ல் காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார்.

🌟அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளை கற்பித்தார். அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பல்கலைக்கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது.

🌟அந்நகரில் தங்குவதற்கு இடமின்றி தவித்த கிரகாம் பெல்லுக்கு, அவரது மாணவரான ஜார்ஜ் சாண்டர்ஸ் என்பவர் தனது வீட்டில் ஓர் பெரிய அறையை கொடுத்து உதவினார்.

🌟அந்த அறை பல்வேறு ஆய்வுப் பணிகளையும் மேற்கொள்ள வசதியாக இருந்தது. பாஸ்டன் நகரின் பெரும் பணக்காரர்களுள் ஒருவரான வழக்கறிஞர் காரிண்டர் கிரீன் ஹப்பர்ட் (புயசiனெநச புசநநn ர்ரடிடியசன) என்பவரின் மகள் மேபெல் (ஆயடிநட) செவிக்குறையுடன் இருந்து வந்தார்.

🌟அப்பெண்ணுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்கும் பொறுப்பை மேற்கொண்ட கிரகாம் பெல், பின்னர் அப்பெண்ணையே 1875ல் திருமணமும் செய்து கொண்டார்.

🌟அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்துவிட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக