சனி, 4 ஜனவரி, 2020

2019ஆம் ஆண்டு : இந்தியா ஒரு பார்வை - பகுதி 2



திரும்பி பார்ப்போம் 2019... இந்தியா ஒரு பார்வை... நடந்தது என்னென்ன?
2019ஆம் ஆண்டு : இந்தியா ஒரு பார்வை - பகுதி 2
ஜூலை
👉உத்தரப்பிரதேச ஆளுநராக நியமனம் செய்யப்பட்ட ஆனந்திபென் படேல் ஜூலை 29ஆம் தேதி பதவியேற்றார்.

👉பாரத ஸ்டேட் வங்கியின் மேலாண்மை இயக்குநரான அன்ஷூலா காந்த் உலக வங்கியின் மேலாண்மை மற்றும் முதன்மை நிதி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

👉டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த இனியன் தங்கப்பதக்கம் வென்றார்.

ஆகஸ்டு
👉உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள முக்கிய சந்திப்புக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் சூட்டப்பட்டது.

👉நிலவை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை நான்காவது முறையாக வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டது.

👉நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

👉மத்திய முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் காலமானார்.

👉இந்தி பட உலகின் முதுபெரும் இசையமைப்பாளரான கயாம் என அழைக்கப்பட்ட மொகமது ஜுஹர் ஹாஸ்மி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

👉இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 19 விளையாட்டு வீரர்களின் பெயர்கள் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

👉ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.

👉உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செப்டம்பர்
👉இந்திய பணக்காரர்களின் பட்டியலில் தொடர்ந்து 8வது முறையாக முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்தார்.

👉தேஜஸ் போர் விமானத்தில் பறக்கும் முதல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை ராஜ்நாத் சிங் பெற்றார்.

👉இந்திய தூதரகங்களில் பணி அமர்த்தப்பட்ட முதல் பெண் விங் கமாண்டர் என்ற பெருமையை அஞ்சலி சிங் பெற்றார்.

அக்டோபர்
👉ஜம்மு மற்றும் காஷ்மீர் 31.10.2019 தேதி முதல் அதிகாரப்பூர்வமாக இரண்டு யூனியன் பிரதேசங்களானது.

👉ஹரியானா மாநில புதிய முதலமைச்சராக மனோகர் லார் கட்டார் 27.10.2019 அன்று பதவியேற்றார்.

👉36 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் இருந்து இலங்கையில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது.

👉ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வழங்க 2 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.

👉2019ஆம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இந்தியரான அபிஜித் பானர்ஜி, அவரது மனைவி எஸ்தர் டுஃப்லோ, அமெரிக்கரான மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.

👉மஹாராஷ்டிரா மாநிலத்தில், பார்வை குறைபாடு உள்ள முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியாக பிராஞ்ஜல் பாட்டில் பதவியேற்றார்.

👉2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, எத்தியோப்பிய நாட்டின் பிரதமர் அபய் அகமது அலிக்கு அறிவிக்கப்பட்டது.

👉பிரான்ஸிடம் இருந்து முதல் ரஃபேல் போர் விமானத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றார்.

👉லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான நாட்டின் முதல் கார்ப்பரேட் ரயிலை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக