வியாழன், 16 ஜனவரி, 2020

2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 2



நாம் கடந்து வந்த 2019... அப்படி என்ன நடந்தது?... உலகத்தில்...!
2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 2
மே
👉ஈபிள் டவரிலிருந்து கம்பி வழியே பறந்து சென்று, பாரீஸ் நகரத்தின் அழகை கண்டு ரசிப்பதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டது.

👉வாடகைக் கார் நிறுவனமான உபர் கடலுக்குள் செல்லும் நீர்மூழ்கி வாகனத்தை தயாரித்து புதிய சாதனையை படைத்தது.

👉இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவின் முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.

👉சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் ஐதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 8 வது இடத்தை பிடித்தது.

👉பாகிஸ்தானைச் சேர்ந்த பாப்கார்ன் வியாபாரி ஒருவர் சொந்தமாக ஒரு விமானத்தை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.

👉உலகிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக ட்ரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டது.

👉சீனாவில் உள்ள 45 பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ஆங்கில வழியில் மருத்துவ படிப்புகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

ஜூன்
👉ஜி-20 மாநாட்டின் போது இந்தியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு சந்திப்புக்கு முடிவு எடுக்கப்பட்டது.

👉உலகிலேயே முதன் முதலாக பி.எச்டி பட்டம் பெற்ற பெண்ணின் (எலீனா கார்னாரோ பிஸ்கோபியா) 373ஆவது பிறந்தநாளை கவுரவிக்கும் வகையில் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு அவரை கூகுள் நிறுவனம் பெருமைபடுத்தியது.

👉உலகளாவிய தலைமைப் பதவிக்கான விருதுக்கு, சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் கூகுள் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை தேர்வு செய்யப்பட்டார்.

ஜூலை
👉சனியின் துணைக் கோளான டைட்டனில் ஆளில்லா விமானத்தை அனுப்பவுள்ளதாக நாசா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

👉மதுபாட்டிலில் மகாத்மா காந்தியின் படத்தை பொறித்ததற்கு, இஸ்ரேல் நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது.

👉இந்தியர்களுக்கு பயனளிக்கும் வகையிலான கிரீன் கார்டு தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

👉உலக பணக்காரர்கள் பட்டியலில் 2 ஆம் இடத்தில் இருந்த பில் கேட்ஸ் மூன்றாம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

👉அமெரிக்காவில் ஆன்லைன் வீடியோ கேம் போட்டியில் 16 வயது சிறுவன் ஒருவன் வெற்றிப் பெற்று 3 மில்லியன் டாலரை பரிசாக பெற்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக