வெள்ளி, 17 ஜனவரி, 2020

2019ல் நடந்த உலக நிகழ்வுகள்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்



2019ல் நடந்த உலக நிகழ்வுகள்... நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்...!

2019ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 3
ஆகஸ்ட்
👉சவுதி அரேபியாவில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என அந்நாடு அரசு அறிவித்தது.

👉கிரீன்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 100 கோடி டன் பனி உருகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

👉பிரான்ஸில் ராணுவ வீரர் ஒருவர், தானே உருவாக்கிய பறக்கும் இயந்திரம் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனைப் படைத்தார்.

👉பாகிஸ்தான் நாட்டு வான்பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

செப்டம்பர்
👉உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார அமைப்பின் (றுர்ழு) புள்ளிவிவரம் தெரிவித்தது.

👉பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான கனடா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

👉அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் மகன் ஹம்சா பின்லேடன் கொல்லப்பட்டதை அதிபர் டொனால்டு ட்ரம்ப் உறுதி செய்தார்.

👉சவுதி அரேபியா முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கான விசாக்களை வழங்க முடிவு செய்தது.

அக்டோபர்
👉2019 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜேம்ஸ் பீப்ள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் க்யூலோஸ் ஆகிய 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

👉2019 ஆம் ஆண்டு வேதியியல் துறைக்கான நோபல் பரிசு ஜான் பி.கோடேனோவ்ஹ், ஸ்டான்லி விட்டிங்ஹோம், அகிரா யோஷினோ ஆகியோருக்கு இந்த நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

👉2019 ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹாண்ட்கேவுக்கு அறிவிக்கப்பட்டது.

👉உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

👉அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸ் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

👉ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக