சனி, 18 ஜனவரி, 2020

உலகம் 2019... கடந்து வந்த பாதை... உங்கள் பார்வைக்கு..!



உலகம் 2019... கடந்து வந்த பாதை... உங்கள் பார்வைக்கு..!

2019-ஆம் ஆண்டு : உலகம் ஒரு பார்வை - பகுதி 4
நவம்பர்
👉குருநானக்கின் 550-வது பிறந்தநாளையொட்டி சிறப்பு நாணயம் ஒன்றை மோடி தாய்லாந்தில் வெளியிட்டார்.

👉லாட்டரியில் சுமார் ரூ. 29 கோடி பரிசு பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனு ஸ்ரீதரன் நாயரை, அபுதாபி பிக் டிக்கட் லாட்டரி நிறுவனம் தேடிய சம்பவம் நிகழ்ந்தது.

👉அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓராண்டு கவுண்ட் டவுன் தொடங்கியது.

👉சீனாவில் கின்னஸ் உலக சாதனைக்காக தயாரிக்கப்பட்டுள்ள தங்கக் கழிப்பறை ஒன்று, ஒரு வர்த்தக விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் அதன் மதிப்பு 12 லட்சம் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது.

👉சுவிட்சர்லாந்து வங்கிகளில் செயல்பாடற்ற நிலையில் இருக்கும் 10 இந்தியர்களின் வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்திற்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.

👉ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா விண்கல்லுக்கு அனுப்பிய ஹயபுஸா 2, தனது ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு பூமிக்கு 2020 ஆம் ஆண்டு திரும்பி வருவதாக அறிவித்தது.

👉நடப்பு ஆண்டில் மட்டும் ஃபேஸ்புக் நிறுவனம் சுமார் 50 லட்சத்து 40 ஆயிரம் போலி கணக்குகளை நீக்கியதாக தெரிவித்தது.

👉பாகிஸ்தானைச் சேர்ந்த இந்துப் பெண் ஒருவர் சிந்து மாகாணம் நடத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய போட்டித் தேர்வில் வெற்றி பெற்று துணை உதவி ஆய்வாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

👉இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

👉அமெரிக்காவில் முதன்முறையாக ஆழ்மயக்க நிலையில் அதாவது மூளையின் செயல்பாட்டை நிறுத்தி வைத்து சிகிச்சை அளிக்கும் முறையை மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டது.

👉இயற்கைச் சீற்றத்தின் தாக்குதலுக்கு அடிக்கடி ஆளாகும் ஜப்பானில் பூகம்பம், நிலநடுக்கம் போன்ற நேரங்களில் தலையில் அடிபட்டு மக்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தவிர்ப்பதற்காக வெள்ளை நிறம் கொண்ட எளிதில் மடிக்கக்கூடிய தலைக்கவசம் ஜப்பான் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

👉சொந்த நாட்டை விட்டு வெளிநாடு சென்று வாழும் மக்கள் கணக்கெடுப்பு ஆய்வில் இந்தியர்களே முதலிடம் பிடித்துள்ளனர்.

டிசம்பர்
👉34 வயதான சன்னா மரின் தற்போது பின்லாந்தின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். உலகின் வயது குறைந்த பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

👉16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க்கை இந்த ஆண்டின் சிறந்த நபராக அமெரிக்காவின் டைம் இதழ் தேர்வு செய்தது.

👉செவ்வாய் கிரகத்தில் தரையில் ஒரு அங்குலத்திற்கு கீழ் நீர்ப்பனிக்கட்டிகள் இருப்பதை நாசா கண்டுபிடித்தது.

👉பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்-க்கு அந்நாட்டின் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

👉மெக்சிகோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மாயன் சமுதாய மக்களின் அரண்மனையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

👉நெதர்லாந்தின் யுஆளுவுநுசுனுயுஆ நகரில் உள்ள நதிகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை சுத்தம் செய்ய பபுல் பேரியர் (டீரடிடிடந டீயசசநைச) என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கால்வாய்களில் தேங்கியிருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை‌ எளிதில் அகற்றமுடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

👉அமெரிக்காவின் டெக்சாஸ் நகர மேயராக 7 மாத குழந்தை ‌பதவியேற்ற சுவாரஸ்யம் நிகழ்ந்தது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக