ஞாயிறு, 12 ஜனவரி, 2020

நியமனங்கள் - ஓர் பார்வை !! (பகுதி-2)



2019... கடந்து வந்த பாதை..!!

நியமனங்கள் - ஓர் பார்வை !! (பகுதி-2)
ஜூன்
திருப்பதி தேவஸ்தான தலைவராக சுப்பாரெட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜூன் 23ஆம் தேதி அறிவித்தார்.

தமிழக காவல்துறையின் டிஜிபியாக ஜே.கே.திரிபாதி ஜூன் 29ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார்.

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக கே.சண்முகமும், சட்ட ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் ஜூன் 30ஆம் தேதி பதவியேற்று கொண்டனர்.
ஜூலை
தமிழக அரசில் சுமார் 9 ஆண்டுகள் நிதித்துறை செயலாளராக இருந்த சண்முகம் ஐஏஎஸ், தமிழக அரசின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து புதிய நிதித்துறை செயலாளராக எஸ்.கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம் செய்து ஜூலை 01ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலினை நியமித்து ஜூலை 4ஆம் தேதி திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டது.

தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்டை நியமித்து ஜூலை 9ஆம் தேதி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உத்தரவிட்டது.

ஜூலை 20ஆம் தேதி : பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநில ஆளுநராக லால்ஜி டண்டன் நியமிக்கப்பட்டார்.

பீகார் மாநில ஆளுநராக பாகு சௌகான் (Phagu Chauhan) நியமிக்கப்பட்டார்.

உத்தரப்பிரதேச மாநில ஆளுநராக அனந்திபென் பட்டேல் நியமிக்கப்பட்டார்.

மேற்கு வங்க மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) நியமிக்கப்பட்டார்.

நாகலாந்து மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.

திரிபுரா மாநில ஆளுநராக ரமேஷ் பயாஸ் நியமிக்கப்பட்டார்.

மத்திய நிதித்துறை செயலாளராக ராஜீவ்குமார் ஜூலை 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
ஆகஸ்ட்
மத்திய அரசின் பாதுகாப்புத்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய்குமாரை அமைச்சரவையின் நியமனக்குழு ஆகஸ்ட் 22ஆம் தேதி நியமித்தது.

பே.டி.எம் நிறுவனத்தின் புதிய தலைவராக அமித் நய்யார் ஆகஸ்ட் 27ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
செப்டம்பர் 01
இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக இருந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கல்ராஜ் மிஸ்ரா அங்கிருந்து மாற்றப்பட்டு ராஜஸ்தான் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக பகத் சிங் கோஷ்யாரி நியமிக்கப்பட்டார்.

இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் ஆளுநராக முன்னாள் தொழிலாளர்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா நியமிக்கப்பட்டார்.

கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சதாசிவம் மாற்றப்பட்டு ஆரிஃப் முகமது கான் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற நியமனங்களை நாளைய பகுதியில் பார்க்கலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக