குழுக்கள் -2016
===============
*1) நாராயணமூர்த்தி குழு:-*
மாற்று முதலீட்டுக்கான கொள்கை என்ற தலைப்பில் தனது அறிக்கையை செபி(SEBI) அமைப்பிடம் சமர்பித்தது
*2) ஆர்.வி ஈஸ்வர் குழு:-*
வருமான வரிச் சட்டம் 1961ன் செயல் திட்டங்களை எளிமையாக்க அமைக்கப்பட்ட ஈஸ்வர் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது
*3) அரவிந்த் பனகாரிய குழு:-*
மும்பை -அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவைக்கான ஆய்வை அரவிந்த் பனகாரிய தலைமையிலான குழு மேற்கொண்டுள்ளது
*4) சியாம் பெனகல் குழு:-*
மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தை மாற்றி அமைப்பதற்காக சியாம் பெனகல் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது
*5) வெங்கையா நாயுடு குழு:-*
ஜாட் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கிடு அளிக்க வேண்டும் என்பதனை ஆராய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
*6) தீபக் நாயக் குழு:-*
கோதாவாரி ஆற்றை தூய்மைபடுத்தி புதுப்பொலிவு பெற செய்ய வேண்டிய வழிமுறைகளை ஆராய தீபக் நாயக் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது
*7) மகேஷ் குமார் சிங்லா குழு:-*
மத்திய அரசு அசாம் மாநிலத்தில் உள்ள குறிப்பிட்ட 6 மலைவாழ் மக்களின் இட ஒதுக்கீடு நிலையை ஆராய மகேஷ் குமார் சிங்லா தலைமையில் குழு அமைக்கப் பட்டுள்ளது
*8) திவாகர் ரெட்டி குழு:-*
திவாகர் ரெட்டி தலைமையிலான குழு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்ற நிலைக்குழு முன் சமர்பித்தது.இக்குழு தனது அறிக்கையில் சமூகத்தில் மிக பிரபலமானவர்கள் விளம்பரத்தில் நடிக்கும்பொழுது அப்பொருட்களின் தரத்தினை அறியாமல் தகவல்களை பரப்பினால் அவர்களுக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையுடன் 50 இலட்சம் அபராதம் விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது
*9) அசோக் தல்வாய் குழு*
மத்திய அரசு 2022 ஆம் ஆண்டிற்குள் விவாசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது .இதற்கான திட்ட வரவை அசோக் தல்வாய் தலைமயில் குழு அமைக்கப் பட்டுள்ளது
*10) பி.பி தாண்டன் குழு:-*
அரசு விளம்பரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சரியாக பின்பற்றப் படுகிறாத என ஆராய பி.பி தாண்டன் தலைமயில் குழு அமைக்கப் பட்டுள்ளது
*11) மதுக்கர் குப்தா குழு*
இந்தியா -பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள எல்லைகளை பாதுக்காப்பு மிக்கதாக மாற்ற வழிமுறைகளை வழங்க மதுக்கர் குப்தா தலைமயில் குழு அமைக்கப் பட்டுள்ளது
*12) அசோக் லகாரி குழு:-*
மத்திய அரசு ஆபரண நகைகள் மீதான கலால் வரி விதிப்பை செயல்படுத்துதல் தொடர்பாக அசோக் லகாரி தலைமயில் குழு அமைக்கப் பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக