செவ்வாய், 18 அக்டோபர், 2016

மலரின் இனப்பெருக்க பாகங்கள் பற்றிய சில தகவல்கள்:-

மலரின் இனப்பெருக்க பாகங்கள் பற்றிய சில தகவல்கள்:-

🌸 தாவரங்களின் முக்கிய உறுப்பு - மலர்
🌸 மலரின் முக்கிய பாகங்கள் - 4
1. புல்லி வட்டம்
2. அல்லி வட்டம்
3. மகரந்த தாள் வட்டம்
4. சூலக வட்டம்
🌸 மலரின் ஆண் இனப்பெருக்க வட்டம் - மகரந்த தாள் வட்டம்
🌸 மலரின் பெண் இனப்பெருக்க வட்டம் - சூலக வட்டம்
🌸 மகரந்த பைகள் அமைந்துள்ள பொருள் - மகரந்த தூள்கள்
🌸 சூலகம் பாகங்கள் - 3 ( சூல்கப்பை, சூலகத் தண்டு, சூலக முடி)
🌸 பூக்கும் தாவரங்களில் பாலினப் பொருக்கம் நிகழ்வுகள் - 2
1. மகரந்த சேர்க்கை
2. கருவுறுதல்
1)🌸 மகரந்த சேர்க்கை வகைகள் - 2
1. தன் மகரந்த சேர்க்கை (ஆட்டோகேமி)
2. அயல் மகரந்த சேர்க்கை (அல்லோகேமி)
🌸 ஒரு மலரின் மகரந்த தூள் அதே மலரின் சூலக முடியை சென்றடையும் நிகழ்வு - தன் மகரந்த சேர்க்கை
🌸 ஒரு மலரின் மகரந்த தூள் அதே இனத்தை சார்ந்த மற்றொரு தாவரத்தின் மலரின் உள்ள சூலக முடியை அடைவது - அயல் மகரந்தச் சேர்க்கை
🌸 அயல் மகரந்த சேர்க்கை வகைகள்:
🍀 விலங்குகள் மூலம் மகரந்த சேர்க்கை - சூப்ஃபில்லி
🍀 நீர் மூலம் மகரந்த சேர்க்கை - ஹைட்ரோஃபில்லி
🍀 பூச்சிகள் மூலம் மகரந்த சேர்க்கை - என்டோமோஃபில்லி
🍀 காற்று மூலம் மகரந்த சேர்க்கை - அனிமோஃபில்லி
🍀 பறவைகள் மூலம் மகரந்த சேர்க்கை  - ஆர்னிதோஃபில்லி
🍀 ஔவால் மூலம் மகரந்த சேர்க்கை - செரித்ரோஃபில்லி
2)🌸 கருவுறுதல்:
🌸 முதிர்ந்த மகரந்த தூள் இரண்டு செல்களை கொண்டது.
🌸 பெரிய செல் உடல் செல் எனவும் அழைக்கப்படும்.
🌸 சிறிய செல் உற்பத்தி செல் (ஜெனரேடிவ் செல்) எனவும் அழைக்கப்படும்.
🌸 முழுமையான கருவுற்ற முட்டைக்கு பெயர் - சைக்கோட்
🌸 கருவுற்ற பின் சூலகம் - விதையாக மாறுகிறது.
🌸 கருவுற்ற பின் சூலுறை விதையுறையாக மாறுகிறது.
🌸 கருவுற்ற பின் சூலகப்பை வளர்ந்து கனியாக மாறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக