செவ்வாய், 25 அக்டோபர், 2016

அரசு நெறிமுறை கொள்கைகள் பற்றிய சில தகவல்கள்:-

அரசு நெறிமுறை கொள்கைகள் பற்றிய சில தகவல்கள்:-

🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம் கொள்ளுதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக