திங்கள், 10 அக்டோபர், 2016

மண் வகைகள்

மண் வகைகள் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
🏜 புவியின் மேற்பரப்பில் மிகச்சிறிய பாறைத் துகள்கள் ஆன படலமே - மண்
🏜 மண் வகைகள் - 5
1. மணல்
2. வண்டல் மண்
3. செம்மண்
4. கரிசல் மண்
5. துருகல் மண் (மலை மண்)
1. மணல்:
🏜 மணல்களுக்குள் இருக்கும் இடைவெளி குறைவு
🏜 காணப்படும் இடம் - கடற்கரை, பாலைவனம்
🏜 முக்கிய பயிர்கள் - தென்னை, சவுக்கு, முந்திரி
2. வண்டல் மண்:
🏜 பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது.
🏜 பழைய வண்டல் மண் - பாங்கர்
🏜 புதிய வண்டல் மண் - காதர்
🏜 காணப்படும் இடம் - சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, கங்கை ஆற்று சமவெளியில்
🏜 முக்கிய பயிர்கள் - நெல், கரும்பு, வாழை
3. செம்மண்:
🏜 இவ்வகை மண்ணில் காணப்படும் சத்து - இரும்பு சத்து
🏜 காணப்படும் இடம் -கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு
🏜 முக்கிய பயிர்கள் - அவரை, துவரை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள்
4. கரிசல் மண்:
🏜 காணப்படும் சத்துகள் - சுண்ணாம்பு சத்து, இரும்பு, பொட்டாசியம்
🏜 குறைந்த அளவு காணப்படும் சத்து - பாஸ்பரஸ், நைட்ரஜன்
🏜 கரிசல் மண் வேறுபெயர் - ரீகர் மண்
🏜 காணப்படும் பகுதி - மகாராட்டிர, ஆந்திரா, குஜராத், மத்திய பிரதேசம்
🏜 விளையும் பயிர்கள் - பருத்தி, புகையிலை, மிளகாய், எண்ணெய் வித்துக்கள்
5. மலைமண்:
🏜 சாலை அமைக்க பயன்படுகிறது.
🏜 காணப்படும் இடம் - மலை பிரதேசங்களில் (கேரளா, கர்நாடக, அஸ்ஸாம்)
🏜 விளையும் பயிர்கள் - காபி, தேயிலை, ரப்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக