புதன், 12 அக்டோபர், 2016

GK 12/10/16

GK 12/10/16

# சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.

# தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்

# ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)

# எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.

# குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு

# நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு

# மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு

# மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு

# குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு

# ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு

# ஐகார எழுத்துக்கு – 1 மாத்திரை அளவு

# எழுத்துக்களில் இண்டு மாத்திரைக்கு மேல் இல்லை. அவ்வாறு இருப்பின் அது அளபெடையாகச் செய்யுளில் வரும்.

# அளபடை என்பது : அ, இ, உ, ஆகிய உயிர் எழுத்துகள் வார்த்தைகளின் நடுவிலும், கடைசியிலும் வருவதில்லை. அவ்வாறு வரின் அதுவே அளபெடையாகும்.

# அளவு + எடை = அளவைக் காட்டிலும் மிக்கு ஒலித்தல்.

# அளபெடை இரு வகைப்படும். அவை – உயிர் அளபெடை, ஒற்றளபெடை

# உயிர் அளபெடை மூன்று வகைப்படும். அவை செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை

# ஒரு உயிரினத்திலிருந்து மற்றொரு உயிரினத்திற்கு உணவாற்றல் மாற்றப்படுவது – உணவுச்சங்கிலி மூலம்

# நீர்ப்பரப்பின் மீது மிதந்து வாழ்கின்ற தாவரத்திற்கு உதாரணம் – ஜக்கார்னியா

# மண்ணில் வேரூன்றி நீரில் மூழ்கியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – வாஸ்நேரியா

# நீரில் வேரூன்றி மிதக்கும் தாவரத்திற்கு உதாரணம் – நிம்ஃபியா

# நீர் நில வாழ்வன தாவரங்களுக்கு உதாரணம் – லிம்னோபில்லா, ஹெட்டிரோபில்லா

# தாவரத்தின் பகுதிகள் தசைப்பற்றுடையதாகவும், இலைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள தாவரங்கள் எந்த சூழ்நிலையில் உயிர் வாழும் – வறள் நிலத்தாவரங்கள்

# எலியின் மூலம் பரவும் நோய்களில் மிகவும் முக்கியமானது – பிளேக்

# சுற்றுப்புறத் தூய்மையை பாதுகாக்கும் உயிரிகள் கழிவு நீக்கிகள் எனப்படுகின்றன.

# கழிவு நீரில் மாசு காட்டிகளாக வளர்வது – குளோரெல்லா, ஆகாயத் தாமரை

# உடல் நல வாழிடங்கள் எனப்படுவது – மலைப்பிரதேசங்கள்

# புல்வெளிப் பிரதேசங்களில் வாழும் விலங்குகளுக்கு உதாரணம் – காட்டெருமை, கலைமான்கள், வரிக்குதிரை, குருவி, கங்காரு

# விலங்கு மிதவை உயிரிகளுக்கு உதாரணம் – கோபிபாடு, ரோடிபர், ஆஸ்ட்ரோகோடுகள்

# வறள் நிலத்தாவரங்களுக்கு உதாரணம் – சப்பாத்தி, சவுக்கு, திருக்கள்ளி

# முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் – 2.87

# கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? – 25

# இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? – 8

# லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு – 2/7

# S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1

# இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2

# ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? – 1/2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக