திங்கள், 31 அக்டோபர், 2016

பொருட்களின் தன்மை பற்றிய சில தகவல்கள்:-

பொருட்களின் தன்மை பற்றிய சில தகவல்கள்:-

🌂 பொருட்களின் நிலைகள் - 3
1. திண்மம் (திடம்)
2. திரவம்
3. வாயு
🌂 திட நிலையில் இருந்து திரவ நிலைக்கு மாறுதல் - உருகுதல்
எ.கா. பனிகட்டி => நீர்
🌂 திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறுதல் - உறைதல்
எ.கா. நீர் => பனிகட்டி
🌂 திரவ நிலையில் இருந்து வாவு நிலைக்கு மாறுதல் - ஆவியாதல்
எ.கா. நீர் => ஆவியாதல்
🌂 திட நிலையில் இருந்து வாவு நிலைக்கு மாறுதல் - பதங்கமாதல்
எ.கா. கற்பூரம், நாப்தலீன், பென்சாயிக் அமிலம், அயோடின்
🌂 வாயு நிலையில் இருந்து நீர்ம நிலைக்கு மாறுதல் - ஆவி சுருங்கி நீர்ம்மாதல்
எ.கா. மழை பொழிவு

🌺கலவைகள்:-
🌂 திண்மத்தில் திண்மம் - உலோகக் கலவைகள்
🌂 நீர்மத்தில் திண்மம் - கடல்நீர்
🌂 வாயுவில் திண்மம் - புகை
🌂 திண்மத்தில் நீர்மம் - இரசக்கலவை
🌂 நீர்மத்தில் நீர்மம் - நீருடன் ஆல்கஹால்
🌂 வாயுவில் நீர்மம் - மேகம், மூடுபனி
🌂 திண்மத்தில் வாயு - வாயுவால் பரப்பு கவரப்பட்ட கரி
🌂நீர்மத்தில் வாயு - சோடா பானங்கள்
🌂வாயுவில் வாயு - காற்று
🌂 நீர்மத்தில் கூழ்மம் - தயிர், வெண்ணெய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக