வெள்ளி, 21 அக்டோபர், 2016

தமிழ் எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் பற்றிய சில

தமிழ் எழுத்துக்கள் பிறக்கும் இடங்கள் பற்றிய சில தகவல்கள்:-

🚀 வல்லினம் பிறக்கும் இடம் - மார்பு
🚀 மெல்லினம் பிறக்கும் இடம் - மூக்கு
🚀 இடையினம் - கழுத்து
எழுத்துக்கள் பிறப்பு பற்றிய தகவல்கள்:-
🖊 வாயை திறந்தால் ஒலிப்பது - அ, ஆ
🖊 வாயை திறப்பதோடு மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவதால் ஒலிப்பது - இ,ஈ,எ,ஏ,ஐ
🖊 உதடுகளை குவித்து ஒலிப்பது - உ,ஊ,ஒ,ஓ,ஔ
🖊 நாவினது முதற்பகுதி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - க், ஞ்
🖊 நடுநா, நடு அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - ச், ஞ்
🖊 நுனிதா, நுனி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது - ட், ண்
🖊 மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் ஒலிப்பது - த், ந்
🖊 மேல் உதடு, கீழ் உதடு பொருந்துவதால் ஒலிப்பது - ப், ம்
🖊 நாக்கின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருத்துவதால் ஒலிப்பது - ய்
🖊 மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் ஒலிப்பது - ர், ழ்
🖊 மேல் வாய்ப்பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதால் ஒலிப்பது - ல்
🖊 மேல்வாய் நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதால் ஒலிப்பது - ள்
🖊 மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதால் ஒலிப்பது - வ்
🖊 மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் ஒலிப்பது - ற், ன்

2 கருத்துகள்: