அமிலங்கள் பற்றிய சில தகவல்கள்:-
🔵 அமிலம் என்பது எந்த மொழி சொல் - அசிட்ஸ் என்ற லத்தீன் மொழி சொல்
🔵 அசிடஸ் என்ற லத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட ஆசிட் என்ற ஆங்கில மொழியில் பொருள் - புளிப்பு சுவை
🔵 நீரில் கரையும் போது ஹைட்ரஜன் அயனிகளைத் (H+) தரும் பொருட்கள் - அமிலங்கள்
🔵 எல்லா அமிலங்களிலும் ஹைட்ரஜன் இருக்கும் ஆனால் ஹைட்ரஜன் உள்ள எல்லா சேர்மங்களும் அமிலங்கள் அல்ல
🔵 அமிலங்கள் வகைகள் - 2
1. கனிம அமிலங்கள்
2. கரிம அமிலங்கள்
🔵 தாதுப் பொருட்களில் இருந்து கிடைப்பவை - கனிம அமிலங்கள்
🔵 கனிம அமிலங்கள் சில - ஹைட்ரோ குளோரிக் அமிலம், நைட்ரிக் அமிலம், சல்ஃப்யூரிக் அமிலம்
🔵 தாவரங்கள், விலங்குகள் இருந்து பெறப்படுவது - கரிம அமிலம்
🔵 கரிம அமிலங்கள் சில - சிட்ரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் (தாவரங்கள் இருந்து கிடைப்பவை), பியூட்ரிக் அமிலம், லாக்டிக் அமிலம், பார்மிக் அமிலம் (விலங்குகள் இருந்து கிடைப்பவை)
🔵 அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
🔵 அமிலம் பினாப்தலினுடன் வினை புரிந்து - நிறங்கள் ஏதும் கொடுப்பதில்லை
🔵 அமிலம் மெத்தில் ஆரஞ்சுடன் வினை புரிந்து இளஞ்சிவப்பு நிறத்தை தருகிறது.
🔵 எந்த பொருளில் எந்த அமிலம் உள்ளது பற்றி கீழே பார்ப்போம்
🎯 ஆப்பிள் - மாலிக் அமிலம்
🎯 தக்காளி - ஆக்சாலிக் அமிலம்
🎯 திராட்சை - டாட்டாரிக் அமிலம்
🎯 எலுமிச்சை - சிட்ரிக் அமிலம்
🎯 பால்/தயிர் - லாக்டிக் அமிலம்
🎯 வெண்ணெய் - பியூட்ரிக் அமிலம்
🎯 வினிகர் - அசிட்டிக் அமிலம்
🎯 கொழுப்பு - ஸ்டெர்ரிக் அமிலம்
🎯 எறும்பு கொடுக்கு - பார்மிக் அமிலம்
🎯 வெங்காயம் - அனலின் அமிலம்
🎯 தேனீர் - டானிக் அமிலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக