புவியியல் சேர்ந்த வளிமண்டலம் பற்றிய சில தகவல்கள்:-
☄ வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள்:-
💥 நைட்ரஜன் - 78%
💥 ஆக்ஸிஜன் - 21%
💥 ஆர்கான் - 0.934%
💥 கார்பன் டை ஆக்சைடு - 0.033%
💥 பிற வாயுக்கள் - 0.033%
☄ வளிமண்டல அடுக்குகள் - 5
1. ட்ரோபோஸ்பியர்
2. ஸ்ட்ரோடோஸ்பியர்
3. மீசோஸ்பியர்
4. அயனோஸ்பியர்
5. எக்சோஸ்பியர்
1. ட்ரோபோஸ்பியர்:
☄ வேறுபெயர் - கீழ் அடுக்கு
☄ 8 கி.மீ முதல் 16 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ இடி, மின்னல், மேகம், புயல் மற்றும் மழை ஆகிய வானிலை மாற்றங்கள் நிகழும் அடுக்கு
☄ வானிலை அடுக்கு என்றும் கூறுவர்
☄ வளிமண்டலத்தில் மொத்த காற்றில் 80% இவ்வடுக்கில் தான் உள்ளது.
2. ஸ்ட்ரோடோஸ்பியர்:
☄ வேறுபெயர் - படுக்கை அடுக்கு
☄ 16 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பரவியுள்ளது.
☄ விமானங்கள் பறக்கும் அடுக்கு
☄ இதில் 20 கி.மீ. முதல் 35 கி.மீ வரை ஓசோன் அடுக்கு காணப்படுகிறது
☄சூரியனில் இருந்து பூமிக்கு வரும் புற ஊதா கதிர்களை தடுப்பது - ஓசோன்
☄ ஓசோனை பாதிக்கும் வாயு - குளோரோ ஃப்ளுரோ கார்பன் (CFC)
☄ ஓசோன் குறியீடு - O3
3. மீசோஸ்பியர்:
☄ வேறுபெயர் - இடை அடுக்கு
☄ 50 கி.மீ முதல் 80 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ எரிகற்கள் வாழும் அடுக்கு
4. அயனோஸ்பியர்:
☄ வேறுபெயர் - வெப்ப அடுக்கு
☄ 80 கி.மீ முதல் 500 கி.மீ வரை பரவியுள்ளது.
☄ வானொலி நிலையத்தில் இருந்து ஒலி பரப்பும் நிகழ்ச்சி மின்காந்த அலைகளை அனுப்பப்படுகிறது.
☄ 100 கி.மீ முதல் 300 கி.மீ வரை நேர் மற்றும் எதிர் மின் அயனிகள் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கு வானொலி அடுக்கு என்றும் அழைக்கப்படும்
5. எக்சோஸ்பியர்:-
☄ வேறுபெயர் - வெளி அடுக்கு
☄ 500 கி.மீ க்கு மேல் காணப்படுகிறது
☄ இவ்வடுக்கில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்
☄ இவ்வடுக்கில் பிறகு விண்வெளி வெற்றிடமாகவே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக