ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) சுழ்நிலையியல் 012


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் 012

குறுநில மன்னர்கள்

🌟 சிறிய நிலப்பகுதியை ஆட்சி செய்தவர்கள் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டிலும் அவர்தம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டும் ஆண்டுவந்தனர்.

அதியமான்

🌟 குறிநில மன்னர்களுள் குறிப்பிடத்தக்கவர் அதியமான் ஆவார். இவர், தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தார். வீரத்திலும் கொடையிலும் சிறந்தவர். இவரது அவையில் பெண்பாற்புலவரான ஒளவையார் இடம் பெற்றிருந்தார். அதியமானின் பலத்தை அறியாமல் தொண்டைமான் என்பவர் தகடூர் மீது படையெடுக்க முயன்றார். அப்போது ஒளவையார் தூது சென்று, அதியமானின் வீரம் மற்றும் படைபலத்தை உணர்த்தி போரை நிறுத்தினார். அதியமான் கடையெழு வள்ளல்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார்.



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
கடையெழு வள்ளல்கள்

🌟 குறிநில மன்னர்களுள் கடையெழு வள்ளல்கள் சிறப்பாகப் பேசப்பட்டுள்ளனர். அவர்கள் தமது வீரத்தைவிடத் தமது கொடைச்சிறப்பாலேயே போற்றப்பட்டனர். பத்துப்பாட்டில் உள்ள சிறுபாணாற்றுப்படை கடையெழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுகின்றது.

💥 முல்லைக்கு தேர் கொடுத்த பாரி.
💥 மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன்.
💥 ஒளவைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த அதியமான்.
💥 அரிதாகக் கிடைத்த ஆடையைத் தான் அணியாமல் சிவனுக்கு வழங்கிய ஆய் அண்டிரன்.
💥 கொல்லிமலைக் கூத்தர்களுக்குத் தன் நாட்டையே பரிசாக வழங்கிய வல்வில்ஓரி.
💥 இரவலருக்குத் தனது குதிரையையும் நாட்டையும் வழங்கிய மலையமான் திருமுடிக்காரி.
💥 காட்டிலும், தன்னை நாடி வந்தவர்களுக்கு வேண்டியவற்றை வழங்கிய நல்லியக்கோடன் ஆகிய எழுவரையும் பலரும் அறிவர்.
நினைத்த மாத்திரத்தில் சற்றும் யோசிக்காமல் கொடை வழங்கியதால் இக்கொடைச்செயலை கொடைமடம் என்று பாராட்டினர்.

சங்கப்புலவர்கள்

🌟 சங்கப்புலவர்களில் கணியன் பு%2Bங்குன்றனார், கபிலர், பரணர், நக்கீரர், பிசிராந்தையார், மோசிகீரனார், பெருஞ்சித்திரனார் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

🌟 ஒளவையார், காக்கைப்பாடினியார், நச்சௌ;ளையார், முடத்தாமக்கண்ணியார், வெள்ளிவீதியார், பாரி மகளிரான அங்கவை, சங்கவை, ஆகியோர் பெண்பாற்புலவர்கள் ஆவர்.

🌟 பாண்டியன் அறிவுடைநம்பி, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், சோழன் நல்லுருத்திரன் போன்ற அரசர்களும் புலவர்களாகத் திகழ்ந்தனர்.

சங்ககாலச் சமுதாயம்

🌟 தமிழக வரலாற்றில் சங்ககாலத்தைப் பொற்காலம் எனக் குறிப்பர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் தமக்கென வாழாதவர்கள். அவர்கள் ஆற்றலை வளர்த்து நாட்டிற்கும் மொழிக்கும் வளர்ச்சி தந்தனர். அறநெறி நின்று, வாழ வேண்டிய நெறியில் வாழ்ந்தனர். அதுவே தமிழ் நெறியாயிற்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக