செவ்வாய், 16 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்


ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

1. கெஸ்டால்ட் என்ற ஜெர்மானிய வார்த்தைக் குறிப்பது. - முழுவதும்

2. மனநோயை ஹிப்னாடிசம் மூலம் குணப்படுத்தலாம் என்றவர். - ஃப்ராய்டு

3. கல்வி உளவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். - பெஸ்டலாஜி

4. வெக்ஸ்லர் நுண்ணறிவு அளவுகோலில் உள்ள மொத்த சொல் சோதனைகள் (Verbal Tests) - 6

5. ′உருவாக்கும் எண்ணங்கள்′ (Creative thinking) என்பது - விரியும் எண்ணங்கள்

6. காக்னேயின் கற்றல் படிநிலைகளில் இறுதிநிலை என்பது - பிரச்சனைக்குத் தீர்வு காணல்

7. நுண்ணிலைக் கற்பித்தல் என்பது - திறன் குறித்தது

8. பிரடெரிக் ஜே.மெக்டொனால்டு நிறுவிய பள்ளி - நடமாடும் பள்ளிகள்

9. விரிசிந்தனை இவர்களுடைய தன்மையாகும் - படைக்கும் திறனுடைய மனிதர்கள்

10. பின்வருவனவற்றுள் கில்போர்டின் நுண்ணறிவின் படிநிலை அமைப்பின் அங்கமாக அமையாதது எது?

அ. காட்சி

ஆ. சிமான்டிக்

இ. ஒழுங்குமுறை

ஈ. நடத்தை

விடை: இ - ஒழுங்குமுறை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக