திங்கள், 29 ஏப்ரல், 2019

TET 2019, சுழ்நிலையியல்,செஞ்சிக்கோட்டை:


TET 2019, சுழ்நிலையியல்,செஞ்சிக்கோட்டை:

🌟 விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மலைக் குன்றுகள் இயற்கையில் அமைந்து காணப்படுகின்றன. இங்கு கிருஷ்ணகிரி, ராஜகிரி, சந்திரகிரி என்று அழைக்கப்படும், மூன்று உயர்ந்த குன்றுகள் உள்ளன.

🌟 மூன்று கோணங்களில் அமைந்த இம்மூன்று குன்றுகளையும் வலிமை மிக்கக் கருங்கல் சுவர்களால் ஆயுத எழுத்து போல இணைத்து செஞ்சிக்கோட்டைக் கட்டப்பட்டுள்ளது.

🌟 செஞ்சிக்கோட்டை 240 மீட்டர் உயரமும், 12 கி.மீ சுற்றளவும் உடையது. இக்கோட்டையைச் சுற்றி 24 மீட்டர் அகலமுள்ள நீர் நிறைந்த அகழியினால் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

🌟 இக்கோட்டையின் வடக்கே வேலு}ர் வாயில், தெற்கே திருச்சி வாயில், கிழக்கே புதுச்சேரி வாயில் என மூன்று கோட்டை வாயில்கள் அமைந்துள்ளன.

🌟 செஞ்சிக்கோட்டையில் எட்டு மாடிக் கல்யாண மண்டபம், செஞ்சியம்மன் கோயில், தானியக்களஞ்சியம், போர்வீரர்களின் பயிற்சிக்கூடம், ஆனைக்குளம், சுழலும் பீரங்கி மேடை, சிறைச்சாலை முதலியன இன்றும் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன.

செஞ்சியை ஆண்ட மன்னர்கள்:

🌟 இக்கோட்டையைப் பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், ஹோய்சாலர்கள், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள், பீஜப்பு%2Bர் சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் ஆகியோர் பல்வேறு கால கட்டங்களில் ஆண்டுள்ளனர்.

🌟 மேலும் ஆனந்தக்கோன், புலியக்கோன், இராஜா தேசிங்கு போன்ற குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர்.

தெரிந்து கொள்வோம்

🌟 திண்டிவனத்திற்கும், திருவண்ணாமலைக்கும் இடையில் உள்ளது செஞ்சி

🌟 செஞ்சிக்கோட்டை உள்ள கிருஷ்ணகிரி மலைக்கு அருகில் பழங்காலச் சமணப்படுகைகள் உள்ளன.

🌟 வலிமையான கற்களால் கட்டப்பட்டுள்ளதால், இதனைக் 'கிழக்கின் ட்ராய்" (Troy of East) என்று ஆங்கிலேயர்கள் கூறினர்.

🌟 செஞ்சிக்குப் பாதுஷா பாத், சிங்கபுர நாடு என்று பல பெயர்கள் உள்ளன.

🌟 செஞ்சிக்கோட்டை ஹம்பியிலுள்ள கட்டடக்கலைக்கு நிகராக உள்ளது.

🌟 செஞ்சிக்கு அருகிலுள்ள ஈச்சங்காடு, மண்டகப்பட்டுக் கல்வெட்டில் மகேந்திரவர்மபல்லவன் செஞ்சியை ஆண்டதற்கான ஆதாரம் உள்ளது.

🌟 ஆனாங்கூர் கல்வெட்டில், இராஜ ராஜ சோழன் செஞ்சியை ஆண்ட போது செஞ்சி, சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக