சனி, 20 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1) குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்



ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்

உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)

நுண்ணறிவின் கோட்பாடுகள்:

🌟 நுண்ணறிவு தனித்த ஒரு திறனை மட்டும் கொண்டதன்று, அது ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களை உள்ளடக்கியுள்ளது.

🌟 இந்தக் கருத்தை விளக்க மூன்று வகை நுண்ணறிவுக் கோட்பாடுகள் கூறப்படுள்ளன.

🌟 அவை ஒற்றைக் காரணி, இரட்டைக் காரணி, குழுக்காரணி என மூவகைப்படும்.

🍀 நுண்ணறிவு ஒரு பொதுத் திறனாகும். இந்த ஒற்றைத் திறன் பலதரப்பட்ட செயல்களுக்குப் பின்னணியாக அமைகிறது. ஒருவரின் பலவகையான திறன்களை இயக்கக்கூடிய வல்லமை வாய்ந்த ஒருதிறன் உண்டு என்றும், அதுவே அவரது நுண்ணறிவாகும் என ஒற்றைக்காரணி கோட்பாடு கூறுகிறது.

🍀 ஸ்பியர்மென் கருத்தின்படி நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது.

நுண்ணறிவு = பொதுக்காரணி (G) %2B சிறப்புக் காரணி (S)

TRB கணினி ஆசிரியர; தேர;வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர;வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
🍀 தர்ஸ்டனின் கருத்துப்படி நுண்ணறிவு ஏழு வகையான அடிப்படை மனத்திறன்களால் ஆனதாகும். இவை ஏழும் தனித்தன்மை கொண்டது. ஒவ்வொன்றும் நுண்ணறிவின் வெவ்வேறு திறன்களை அளப்பவை.

1. சொல்லாற்றல் :

சொற்களால் குறிக்கப்படும் பொதுக் கருத்துக்களின் பொருள்களை உணர்ந்து அவற்றை சிந்தனையில் பயன்படுத்தும் திறன்.

2. சொல்வேகத்திறன் :

வேகமாக சொற்களைப் புரிந்துகொள்ளவும், வெளிப்படுத்தவும், நினைக்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் கூடிய ஆற்றல்.

3. எண்ணாற்றல் :

அடிப்படை கணிதச் செயல்களை வேகமாகவும், சரியாகவும் செய்யும் ஆற்றல்.

4. இட ஆற்றல் :

புறவெளியில் உள்ள பொருட்களையும், அவற்றுக்கிடையேயுள்ள தொடர்புகளையும் அறியும் ஆற்றல்.

5. நினைவாற்றல் :

கருத்துக்கள், நிகழ்வுகளை விரைவில் மனதில் பதிய வைத்து தேவைப்படும் போது மீட்டுக்கொணரும் ஆற்றல்.

6. புலன்காட்சி வேகம் :

வேகமாகவும், சரியாகவும் தூண்டல்கள், பொருள்களை கண்டறியும் திறன்.

7. காரணகாரியத் தொடர்பு அறிதல் :

'இதனால் இது விளையும், இந்த விளைவிற்கு இதுதான் காரணம்" என்பன போன்ற தொடர்பை அறியும் ஆற்றல்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக