செவ்வாய், 23 ஏப்ரல், 2019

TET Exam 2019 சுழ்நிலையியல் 013


TET Exam 2019
சுழ்நிலையியல் 013

வரைபடங்கள் (Maps)

🌟 புவிக்கோளத்திலிருந்து அதிகத் தகவல்களை அறிய முடிவதில்லை. ஏனெனில், அது கோளவடிவில் உள்ளது. எனவே, பு%2Bமியின் மேற்பரப்பில் உள்ள நிலத்தோற்றங்களை அறிந்துகொள்ள உருவாக்கப்பட்டதே வரைபடங்கள் ஆகும். வரைபடம் என்பது பு%2Bமிப்பரப்பை ஒரு குறிப்பிட்ட அளவீட்டு முறையில் வரைவதே ஆகும்.

🌟 பு%2Bமியின் நிலத்தோற்றங்களை வரைபடங்களில் பார்த்து அறிந்துகொள்ள வண்ணங்கள், திசைகள் மற்றும் குறியீடுகள் பெரிதும் உதவுகின்றன. வரைபடத் தயாரிப்பில் உலகம் முழுவதும் இவை ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

வண்ணங்கள்:

🌟 பு%2Bமியின் பல்வேறு நிலத்தோற்றங்களை வரைபடத்தில் கண்டறிய பலவித வண்னங்கள் உதவுகின்றன.

திசைகள்:

🌟 வரைபடங்களில் உள்ள இடங்களை அறிந்து கொள்ளத் திசைகள் இன்றியமையாதவை, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய நான்கு திசைகள் அடிப்படையான திசைகளாகும்.


🌟 பு%2Bமியின் இயற்கை நிலத் தோற்றங்களையும், மனிதனால் உருவாக்கப்பட்ட இடங்களையும் வரைபடத்தில் அவ்வாறே வரைய இயலாது. அவற்றை வரைபடத்தில் காண்பிக்க உதவுவதே குறியீடுகள் ஆகும்.

வரைபடங்கள் பல வகைப்படும்.(எ.கா)

🌟 இயற்கை அமைப்பு வரைபடங்கள்

🌟 அரசியல் அமைப்பு வரைபடங்கள்

🌟 காலநிலை வரைபடங்கள்

🌟 போக்குவரத்து வழிகள் வரைபடங்கள்

🌟 கனிம வளங்கள் வரைபடங்கள்

வரைபடங்களின் பயன்கள்:

🌟 வரைபடங்கள் வரலாற்று அறிஞர்களுக்கும், புவியியல் அறிஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக உள்ளன.

🌟 கப்பல் ஓட்டும் மாலுமிகளுக்கும், நாட்டைப் பாதுகாக்கும் இராணுவத்தினருக்கும் வரைபடங்கள் பயன்படுகின்றன.

🌟 சுற்றுலாப் பயணிகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வரைபடங்கள் உதவுகின்றன.

வரைபடப் புத்தகம் (Atlas)

🌟 வரைபடங்களின் தொகுப்பே வரைப்படப் புத்தகம் ஆகும். வரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்தி, பு%2Bமியின் மேற்பரப்பில் உள்ள நிலத்தோற்றங்கள் மற்றும் உலக நாடுகளைப் பற்றிய பல்வேறு தகவல்களை அறியலாம்.

🌟 பல்வேறு நாடுகள், நிலத்தோற்றங்கள், வளங்கள், போக்குவரத்து வழிகள் ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும் போது, கட்டாயமாக வரைபடங்கள் மற்றும் வரைபடப் புத்தகத்தைப் பயன்படுத்த வேண்டும். நாம் படிக்கும் தோற்றங்களைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வரைபடங்கள் உதவியாக உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக