ஞாயிறு, 30 ஜூன், 2019

340 இனங்களில் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்ட `தமிழ் மறவன்’!




340 இனங்களில் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்ட `தமிழ் மறவன்’!

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் எனப்படும் [தமிழ் மறவன்] தமிழ் நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் எனப்படும் [தமிழ் மறவன் ] தமிழ் நாட்டின்  மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மறவன்

மாநில பறவை, மாநில விலங்கு, மாநில மரம், மாநில பூ, பட்டியலில் தற்போது தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியும் இடம் பெற்றுள்ளது. அழிந்துவரும் வண்ணத்துப்பூச்சி இனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழகத்திற்கென தனியாக மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வுசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.


வண்ணத்துப்பூச்சி

காட்டுயிர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல்வேறு வகை அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டும் 340 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் மாநில வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்ய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வந்தனர். வண்ணத்துப்பூச்சியைத் தேர்வுசெய்யும் முயற்சி, கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்தது. ஆரம்பத்தில், தமிழ் லேஸ்விங்  Tamil Lacewing (Cethosia nietneri), எனப்படும் வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டது. ஆனால், இது அபூர்வ வகை என்பதால் எளிதில் காண்பது கடினம். இதனைத் தொடர்ந்து, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தமிழ் இயோமென் (தமிழ்  மறவன்)  Tamil Yeoman (Cirrochroa thais),என்ற வண்ணத்துப்பூச்சி, தமிழ்நாட்டின் மாநில வண்ணத்துப் பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையும் பிறப்பித்துள்ளது. இந்த வண்ணத்துப்பூச்சி, அடர்  ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓர் அங்கமான நீலகிரியில், குன்னூர், கூடலூர் மற்றும் முதுமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் காண முடியும்.

இதுகுறித்து  ஆக்ட் ஃபார் பட்டர்ஃபிளைஸ் இயக்கத்தின் நிறுவனர் மோகன் பிரசாத் கூறுகையில், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டிற்கென மாநில வண்ணத்துப்பூச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களில் மாநில வண்ணத்துப்பூச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 5 -வது மாநிலமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள 340 வகை வண்ணத்துப்பூச்சிகளில், 'தமிழ் மறவன்' எனும் இந்த வண்ணத்துப்பூச்சியைப் பரிந்துரைசெய்தோம். அரசும் இதனை ஏற்று, மாநில வண்ணத்துப்பூச்சியாக அறிவித்துள்ளது.மேலும், இந்த வகை வண்ணத்துப்பூச்சியை மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காண முடியும். அதே சமயம், இவை உண்ணும் தாவரமும் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே காணப்படும்'' என்றார். 
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக