வியாழன், 6 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள் 


1. சயங்கொண்டார் எழுதிய வேறு நு}ல்கள் எவை? - இசை ஆயிரம், உலாமடல்

2. சயங்கொண்டார் எந்த மன்னரிடம் அரசவைப் புலவராக இருந்தார்? - முதல் குலோத்துங்கன்

3. 'பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் பாராட்டிய புலவர் யார்? - பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

4. 'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" - எனக் கூறும் நு}ல் எது? - பன்னிரு பாட்டியல்

5. தமிழில் தோன்றிய முதல் பரணி எது? - கலிங்கத்துப்பரணி

6. 'தென்தமிழ் தெய்வப்பரணி" என புகழ்ந்தவர் யார்? - ஒட்டக்கூத்தர்

7. 'எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப் பரணியே" எனக் கூறியவர் யார்? - பேரறிஞர் அண்ணா

8. நவ்வி - என்பதன் பொருள் என்ன? - மான்

9. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்? - 96, அதில் கலிங்கத்துப்பரணியும் ஒன்று

10 'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி" எனக் கூறும் நு}ல் எது? - புறப்பொருள் வெண்பாமாலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக