வெள்ளி, 7 ஜூன், 2019

TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!


TET தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு !!

📝 அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேருவதற்கு ′டெட்′ என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.

📝 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளில் தேர்ச்சி பெற வேண்டும்.

📝 இந்த ஆண்டு தாள் ஒன்றுக்கான தேர்வில் 1 லட்சத்து 83 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

📝 முதலில் தேர்வு நாளில் அதிகாலையில் சீக்கிரமாக எழுந்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டிய நேரத்திற்கு குறைந்தது அரைமணி நேரமாவது முன்னதாகவே சென்று விடுங்கள். அப்படிச் சென்றாலே பாதி டென்சன் குறைந்து விடும்.

📝 மேலும் தேர்விற்குத் தேவையான ஹhல்டிக்கெட், அடையாள அட்டை, புகைப்படம் போன்றவற்றை இன்றே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

📝 ஆசிரியர் தகுதித் தேர்வர்கள் செய்த பிழையால் சில ஹhல் டிக்கெட்களில் புகைப்படம் இடம்பெற வேண்டிய இடத்தில் தேர்வு எழுதுவோரின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது.

📝 ஹhல் டிக்கெட்டில் பிழை உள்ள தேர்வர்கள், தங்களிடம் உள்ள ஒரு புகைப்படத்தை ஹhல் டிக்கெட்டில் ஒட்டி, அரசு பதிவுபெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற வேண்டும் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

📝 தேர்வு மையத்தில் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரிடம் வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு இன்னொரு புகைப்படத்தை கொடுக்க வேண்டும்.

📝 மேலும் அரசின் அடையாள அட்டைகளான ஆதார், பான், பாஸ்போர்ட் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக