வியாழன், 6 ஜூன், 2019

TET - 2019 முந்தைய ஆண்டு Original வினாத்தாள் தாள் - 2


TET  - 2019
முந்தைய ஆண்டு Original வினாத்தாள்
தாள் - 2

1. தமிழ்நாடு இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கிறது - 8°05′ லிருந்து 13°09′ வடக்கு

2. தமிழ்நாட்டில் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம் - கல்பாக்கம்

3. TNPL என்பதன் விரிவாக்கம் - தமிழ்நாடு செய்தித்தாள் அச்சு மற்றும் காகித நிறுவனம்

4. கீழ்கண்டவற்றில் எது பணத்தின் பணியை குறிப்பதில்லை?

அ) பரிமாற்றக் கருவி
ஆ) மதிப்பின் அளவுகோல்
இ) எதிர்கால செலுத்துகைக்கான நிலைமதிப்பு
ஈ) ஒன்றுபடுத்துவதற்கான கருவி

விடை : ஈ

5. பொருத்துக

அ) நிலம் - 1. இலாபம்
ஆ) உழைப்பு - 2. வட்டி
இ) மூலதனம் - 3. கூலி
ஈ) அமைப்பு - 4. வாடகை

அ) 4 3 2 1
ஆ) 3 1 2 4
இ) 3 2 4 3
ஈ) 4 2 4 1

விடை : அ

7. இவற்றில் எது மூலதனத்தின் வடிவம் அல்ல?
அ) பருமப்பொருள் மூலதனம்
ஆ) பண மூலதனம்
இ) இயற்கை மூலதனம்
ஈ) மனித மூலதனம்
விடை : இ

8. இதில் தவறான கூற்றை தருக.

அ) சமூகமும், சமுதாயமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஆ) சமூகத்தின் நோக்கம் - பொதுநலம்
இ) சமூகம் பல குழுக்களின் தொகுதி - ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
ஈ) சமூகம் என்பது தனிப்பட்ட மனிதர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வாழ்வதற்கான முறையை எதிர்பார்த்தல்

விடை : ஆ

9. கிராம பஞ்சாயத்தின் பணிகளில் வராத ஒன்று எது?

அ) கிராமங்களில் கிணறு வெட்டுதல்
ஆ) கிராமங்களில் உள்ள விளையாட்டு மைதானங்களை கவனித்தல்
இ) கிராமங்களில் சாலைகள் அமைத்தல்
ஈ) கிராமங்களில் மின்சார உற்பத்தியைப் பெருக்குதல்

விடை : ஈ

10. பொருத்துக.
அ) லாலா லஜபதி ராய் - 1. நேதாஜி
ஆ) சுபாஷ் சந்திரபோஸ் - 2. பெருந்தலைவர்
இ) சர்தார் வல்லபாய் படேல் - 3. பஞ்சாபின் சிங்கம்
ஈ) கு. காமராஜ் - 4. இந்தியாவின் பிஸ்மார்க்

அ) 4 3 1 2
ஆ) 3 1 4 2
இ) 3 4 1 2
ஈ) 1 4 3 2

விடை : ஆ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக