திங்கள், 3 ஜூன், 2019

TET EXAM - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET EXAM - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. முசபர்சங் ஆனந்தரங்கருக்கு எந்த பட்டமும் பரிசும் வழங்கினார்?
1749 ஆம் ஆண்டு 3000 குதிரைகளை வழங்கி ஆனந்தரங்கருக்கு மன்சுபேதார் என்னும் பட்டத்தை அளித்தார்.

2. ஆனந்தரங்கர் எப்பதவியில் நியமிக்கப்பட்டார்?
செங்கற்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாகவும், அம்மாவட்டம் முழுமைக்கும் ஜாகீர் தாரராகவும் நியமிக்கப்பட்டார்.

3. யாருக்கு பொதுமக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் உரிமை இருந்தது?
ஆனந்தரங்கருக்கு இருந்தது.

4. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்?
பெப்பிசு

5. ஆனந்தரங்கர் எவ்வாறெல்லாம் போற்றப்படுகிறார்?
இந்தியாவின் பெப்பிசு எனவும், நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றுகின்றனர்.

6. ′ஏழை என்றும் அடிமை என்றும் இல்லை′ என்று யார் கண்ட கனவு?
பாரதியார்

7. சொல் என்றால் என்ன?
ஓர் எழுத்து தனித்தேனும் ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தேனும் வந்து ஒரு பொருளை உணர்த்துவதாகும்.

8. சொல்லின் வேறு பெயர்கள் யாவை? - பதம், மொழி, கிளவி

9. பதம் எத்தனை வகைப்படும்? - பதம் இரு வகைப்படும். 1) பகுபதம் 2) பகாப்பதம்

10. பகாப்பதம் என்றால் என்ன? - பிரித்தால் பொருள் தராத சொல்லாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக