வெள்ளி, 7 ஜூன், 2019

TET - 2019 முந்தைய ஆண்டின் Original வினாத்தாள்


TET  - 2019
முந்தைய ஆண்டின் Original வினாத்தாள்

1. செயல்களில் மேலான நிலையை அடைய முற்படுதலே - அடைவு%2Bக்கம்

2. பின்வருவனவற்றில் ஸ்ப்ரேங்கரின் ஆளுமை வகைப்பாட்டில் இடம் பெறாத வகை எது?

அ) கொள்கை
ஆ) அழகுணர்ச்சி
இ) அரசியல்
ஈ) பொருள் சார்பு

விடை : ஈ

3. முதல் மின்னஸோடா பலவாளுமைப் பண்புகள் பற்றிய பட்டியலில் இடம் பெற்ற மொத்த உருப்படிகளின் எண்ணிக்கை - 550

4. வார்த்தைகள் மற்றும் எண்களை வேகத்துடனும் துல்லியமாகவும் பதிவு செய்யும் திறன் - புலன்காட்சித்திறன்

5. மாஸ்லோவின் படிநிலைத் தேவைகள் கோட்பாட்டின் படிகளின் எண்ணிக்கை - 7 (or) 5.

6. 'இரு காரணிக் கோட்பாடு" அறிமுகப்படுத்தியவர் - ஸ்பியர்மேன்

7. கோடிட்ட இடத்தை சரியான விடையை தேர்ந்தெடுத்து நிரப்பிடவும்.
ஓர் அறிவியல் பாட ஆசிரியர் ஒரு தாவரத்தினை காண்பித்து அதன் பாகங்களைக் கற்பிக்கிறார். இதனை ஆசிரியர் ---------- உளவியல் கோட்பாட்டினை பயன்படுத்துவதாக ஊகிக்கலாம்.

அ) ஹல்லின் முறையான நடத்தைக் கோட்பாடு
ஆ) ஹெபின் நரம்பு மற்றும் தசையியக்கக் கோட்பாடு
இ) கெஸால்ட்டின் ஓட்காட்சி கற்றல் கோட்பாடு
ஈ) ஜங்கின் மன சிகிச்சை

விடை : இ

8. பாலுணர்வு வெட்கப்பட வேண்டிய, அழுக்கான அல்லது கெட்டச் செயல் என்பதற்கு பதிலாக இயற்கையான, அவசியமான, உயிரியல் செயலியல்பாடு என தெரிவித்த மிகப்பெரிய உளவியலறிஞரின் பெயர் என்ன? - ஸிக்மன்ட்/பிராய்ட்

9. மாறும் நிலை முரண்பாடுகள் குமரப்பருவத்தினரால் அடிக்கடி எதிர்கொள்வதற்கு காரணம்

அ) அவர்கள் வயது வந்த நபராக நடத்தப்படுவது
ஆ) அவர்கள் இன்னும் குழந்தையாக நடத்தப்படுவது
இ) அவர்கள் வெறுக்கத்தக்க நபராக நடத்தப்படுவது
ஈ) அவர்கள் குழந்தையாகவோ அல்லது வயது வந்தோராகவோ கருதப்படாததால்

விடை : ஈ

10. குழந்தைத் திருமணங்கள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. ஏனெனில் தம்பதிகள் இதனை அடைந்திருக்க வேண்டும்.

அ) சமூக முதிர்ச்சி
ஆ) உடலியல் முதிர்ச்சி
இ) பாலியல் முதிர்ச்சி
ஈ) சட்டபு%2Bர்வமான முதிர்ச்சி

விடை : ஈ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக