ஞாயிறு, 2 ஜூன், 2019

TET - 2019 பொதுத்தமிழ் வினா விடைகள்


TET  - 2019
பொதுத்தமிழ் வினா விடைகள்

1. சீட்டுக்கவி என்பதன் வேறுபெயர்கள் என்ன?
ஓலைத்தூக்கு, ஓலைப்பாசுரம்

2. ஆயிரம் தலையை உடையவன் யார்?
ஆதிசேடன்

3. குதிரையைக் குறிக்கும் பல பெயர்கள் எவை?
கந்துருவம், கந்துகம், கோணம், கோடை, குந்தம், பாடலம், சடிலம், கிள்ளை

4. வீரராகவர் எத்தகைய மாற்றுத் திறனாளி?
பிறவியிலேயே கண்பார்வை இழந்தவர்.

5. வீரராகவர் எங்கு பிறந்தார்?
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பு%2Bதூரில் பிறந்து பொன்விளைந்த களத்தூரில் வாழ்ந்தவர்.

6. வீரராகவர் யாரை புகழ்ந்து பாடி, என்ன பரிசுகள் பெற்றார்?
இலங்கை சென்று பரராசசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் பரிசாகப் பெற்றார்.

7. அந்தக்கவி வீரராகவர் எழுதிய வேறு நு}ல்கள் யாவை?
திருக்கழுக்குன்றப்புராணம், திருக்கழுக்குன்ற மாலை, சேயு%2Bர் முருகன் பிள்ளைத்தமிழ், திருவாரூர் உலா, சந்திரவாணன் கோவை ஆகும்.

8. தனிப்பாடல் திரட்டு யாரால் எழுதப்பட்டது?
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் வாழ்ந்த புலவர் பலர் பாடிய தொகுப்பாகும்.

9. தனிப்பாடல் திரட்டில் எத்தனை புலவர்கள் பாடியுள்ளனர்?
110 புலவர்கள்

10. தனிப்பாடல் திரட்டில் எத்தனை பாடல்கள் உள்ளன? வீரராகவர் எழுதிய பாடல்கள் எத்தனை?
மொத்தம் 1113 பாடல்கள் உள்ளது. அதில் வீரராகவர் பாடின பாடல்கள் 39 ஆகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக