புதன், 24 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2017


ஆசிரியர் தகுதித் தேர்வு
முந்தைய ஆண்டு வினாத்தாள் - 2017

தாள் - 1

1. நாம் முதலில் வலது கையினால் கற்றுக்கொண்ட ஒரு உடலியக்கச் செயல்பாடு பின்பு இடது கையினால் பழகும்போது மிகவும் சுலபமாக இருப்பது - இருவழிக் கற்றல் மாற்றம்

2. ----------- ஆனது தூண்டலுக்கான துலங்களை எந்த ஒரு முற்கற்றல் மற்றும் முன் அனுபவம் அல்லாத தன்னிச்சையற்ற நடத்தையின் விளைவு எனலாம். - எதிர்வினை செயல்பாடு

3. எலும்பு மற்றும் தசைத்திசுக்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் வளர்ச்சி ஹhர்மோனை சுரக்கும் சுரப்பி - பிட்யு%2Bட்டரி சுரப்பி

4. ஒரு தனிநபரின் க்ரோமோஸோம்கள் ------------ என்றழைக்கப்படும் விளக்கப்படம் மூலம் சோதிக்கப்படுகிறது. - கேரியோடைப்

5. குழந்தையின் வாயின் எதிர்வினை செயல்பாட்டினை இவ்வாறாக அழைக்கலாம் ------- - மூல எதிர்வினை



காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. உம்முடைய நர்சரிப் பள்ளியின் முதல் தினத்தை நீவிர் நினைவு கூர்ந்தால் அது -------- - நிகழ்வு பொருத்த நினைவு

7. தானியங்கு நரம்புத் தொகுதியில் மனவெழுச்சிகளை தூண்டும் செயல்களினால் ஏற்படும் மாற்றங்களின் வேகத்தை அளவிட பயன்படும் கருவியின் பெயர் - பாலிகிராப்

8. ஓர் ஆசிரியர் தம் மாணவர்களுக்கு அதிகப்படியான குழு விவாதம், குழுச் செயல் திட்டம் போன்ற குழுச்செயல்பாடுகளில் ஈடுபடுத்தும் பொழுது அதன் பரிமானம் வெளிக்காட்டுவது - கற்றல் ஒரு சமூக செயல்பாடு

9. பள்ளியில் கல்வி என்பது நான்கு விதமான கற்றல் திறன்களை வளர்க்க வழிவகை செய்ய வேண்டுமென வலியுறுத்தும் அறிக்கை - டெலார்ஸ் அறிக்கை

10. மைய நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளின் உடல் மற்றும் உளச் செயல்பாடுகளில் மந்தத்தன்மை காணப்படுதல் போன்ற அறிகுறிகளால் அறியப்படுவது - கிரிட்டினிசம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக