ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

TET - 2019.பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 031


TET - 2019.பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 031

சொற்றொடர் வகைகள்:-

1. கீழ்க்கண்டவற்றில் எது பெயரெச்சத் தொடர்?

அ) உடைந்த மேசை

ஆ) சென்று வந்தான்

இ) மகனே வா

ஈ) வந்தான் முருகன்

விடை : அ) உடைந்த மேசை

2. 'வந்தான் குமணன்" - என்பது எவ்வகைத் தொடர்? - வினைமுற்றுத் தொடர்

3.தங்கம் தகதகவென மின்னுகிறது. இத்தொடரில் உள்ளது - இரட்டைக்கிளவி

4. கீழ்க்கண்டவற்றில் எது அடுக்குத் தொடர்?

அ) கலகல

ஆ) மடமட

இ) பாம்பு பாம்பு

ஈ) மளமள

விடை : இ) பாம்பு பாம்பு

5. மற்றுப்பிற எனும் தொடரில் ′மற்று′ என்பது - இடைச்சொல்

உங்களது Bio-data-வை நீங்களே பல வடிவங்களில் தயார் செய்ய...

இங்கே கிளிக் செய்யுங்கள்..!
6. சாலப் பசித்தது என்பது ---------- தொடர். - உரிச்சொல்

7. கூடிப் பேசினர் எனும் தொடர் ----------- ஆகும். - வினையெச்சத் தொடர்

8. மரக்கிளை ----------- என முரிந்தது. - சடசட

9. வா வா வா என்பது --------- ஆகும். - அடுக்குத் தொடர்

10. உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடைபெற்றது - என்பது? - செய்தித்தொடர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக