புதன், 17 ஏப்ரல், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 புவியியல் குறிப்புகள் 008


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
புவியியல் குறிப்புகள் 008


தமிழ்நாட்டின் வளங்கள்

உயிரின வளங்கள் : உயிர் கோளத்தினின்று பெறப்படுபவை உயிரின வளங்கள் எனப்படும். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களிலிருந்து பெறுகின்றவை.

புதுப்பிக்க இயலும் வளங்கள் : மீண்டும் உருவாகக் கூடியதும், முற்றிலும் தீர்ந்து விடாததுமான வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்கள் எனப்படுகின்றன. (எ.கா) சு%2Bரிய ஆற்றல், காற்று ஆற்றல்

புதுப்பிக்க இயலாத வளங்கள் : மீண்டும் உருவாக்க இயலாததும் எளிதில் அல்லது விரைவில் தீர்ந்து விடக் கூடியதுமான வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்கள் எனப்படுகின்றன. (எ.கா) நிலக்கரி, பெட்ரோலியம் போன்றவை.


தமிழ்நாட்டின் மண் வளங்கள்

❄ 5 வகையான மண் உள்ளன.
❄ ஒரு செ.மீ மண் உருவாகுவதற்கு 100 ஆண்டுகள் தேவைப்படுகிறது.
1. வண்டல் மண் : தஞ்சாவு%2Bர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலு}ர், விழுப்புரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஆற்று சமவெளிகளில் காணப்படுகிறது.
2. கரிசல் மண் : கோயம்புத்தூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன.
3. செம்மண் : தமிழ்நாட்டில் அதிக பரப்பளவில் செம்மண் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் செம்மண் உள்ளது.
4. லேட்டரைட் : மலைப் பகுதிகளில் காணப்படுகிறது.
5. உவர்மணல் : கடற்கரையோர பகுதிகளில் மணல் உள்ளன.

TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,

பாடத்திட்டம்(Syllabus)...

Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.

வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.

முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
காட்டு வளங்கள்

❄ தமிழ்நாட்டில் 3000க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் உள்ளன.

❄ கொடைக்கானல் பகுதியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை பு%2Bக்கும் குறிஞ்சி மலர் உள்ளன.

❄ நீலகிரியில் தைலமரம் (யு%2Bகலிப்டஸ்) அதிகளவில் உள்ளன.

❄ பழனி மலை, குற்றால மலை பகுதிகளில் மருத்துவ மூலிகைகள் மிகுந்து காணப்படுகின்றன.

❄ திருநெல்வேலி - பனைமரம், வேலு}ர் மாவட்டத்தில் ஜவ்வாது மலைப் பகுதியில் சந்தன மரம் வளர்க்கப்படுகிறது.

❄ அக்டோபர் மாதத்தின் 'வன மகோத்சவம்" என்ற விழா கொண்டாடப்படுகிறது.

❄ அக்டோபர் 4 - உலக வனவிலங்கு தினம்.

❄ மார்ச் 21 - உலக நாடுகள் தினம்.

❄ மார்ச் 22 - உலக நீர் தினம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக