TET 2019,சுழ்நிலையியல் 014
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் முக்கியத்துவம்:
🌟 உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்குக் குறையாமல் இருக்க வேண்டும்.
🌟 கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்கள் கிராமத்தின் வளர்ச்சிக்குத் தன் பங்கேற்பைச் சிறப்பாகச் செய்கின்றனர்.
🌟 இந்த அனுபவம், பெண்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், பிற பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் போது ஏழ்மை, பெண்சிசுக் கொலை, குடிப்பழக்கம் போன்ற சமூகப் பிரச்சனைகள் எதிர்கொள்ள எளிதாக அமைகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்:
🌟 நமது நாட்டில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளைப் போலவே நகரங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் தொகைக்கு ஏற்ப மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
அவை:
1. பேரூராட்சி
2. நகராட்சி
3. மாநகராட்சி
🌟 பத்து இலட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ள பெரிய நகரங்கள் மாநகராட்சிப் பகுதியாக அறிவிக்கப்படுகின்றன.

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்:
1. சென்னை
2. மதுரை
3. கோயம்புத்தூர்
4. சேலம்
5. திருநெல்வேலி
6. திருச்சிராப்பள்ளி
7. திருப்பு%2Bர்
8. ஈரோடு
9. வேலு}ர்
10. தூத்துக்குடி
11. தஞ்சாவு%2Bர்
12. திண்டுக்கல்
13. ஓசு%2Bர்
14. நாகர்கோயில்
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 14 மாநகராட்சிகள் உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக