TET Exam 2019 சுழ்நிலையியல்.
உள்ளாட்சி அமைப்புகள்:
🌟 இந்தியா உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. நம் நாடு மிக அதிக மக்கள் தொகை கொண்டதாகும். நமது நாட்டில் மக்களாட்சி அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது.
🌟 சட்டமன்றங்களின் வாயிலாக மாநில அளவில் சட்டமியற்றி ஆட்சி நடைபெறுகிறது. மாநிலம், பல சிற்று}ர்களையும், நகரங்களையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்தின் அமைவிடமும் நகரத்தின் அமைப்பும், வெவ்வேறாக உள்ளது. ஊருக்கு ஊர், தேவைகள் வேறுபடுகின்றன.
👉 இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பை ஏற்படுத்தியவர் ரிப்பன் பிரபு 👈
🌟 மாநில அரசுகள் இயற்றும் பொதுவான சட்டதிட்டங்கள் ஊரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. எனவே, அந்தந்த ஊர் மக்கள் அவரவர்கள் ஊரிலேயே கூடிச் சட்ட திட்டங்களை உருவாக்கி, வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்துகின்றனர்.
🌟 சட்டமன்றங்கள் மாநில அளவில் இயற்றும் திட்டங்களோடு உள்ளூர்த் தேவைகளை விவாதித்துத் தனித்தனியே திட்டமிட்டுச்செயல்பட உள்ளாட்சி அமைப்புகள் வழி வகுக்கின்றன. உள்ளாட்சி மன்றங்கள் அதிகாரப் பரவலுக்கு துணை புரிகின்றன.
TRB கணினி ஆசிரியர் தேர்வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர்வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய,  இங்கே கிளிக் செய்யுங்கள்..!
🌟 ஊரகப் பகுதியில் தங்கள் ஊர் மக்களின் நல்வாழ்வுத் தேவைகளை நிறைவேற்ற ஊராட்சி மன்றங்கள் செயல்படுகின்றன. நகர்ப்புறத்தில் வாழ்வோரின் நல்வாழ்வுத் தேவையான நகராட்சி மன்றங்கள் நிறைவேற்றுகின்றன. அவ்வாறே மிகப்பெரிய நகரங்களில் நல்வாழ்விற்கான சட்டதிட்டங்களை மாநகராட்சி மன்றங்கள் வகுத்துத் தருகின்றன.
🌟 கிராமப்புற உள்ளாட்சியில் மூன்று அடுக்கு அமைப்புகள் உள்ளன. அவை
1. கிராம ஊராட்சி - கிராம அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்
2. ஊராட்சி ஒன்றியம் - ஒன்றிய அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்
3. மாவட்ட ஊராட்சி - மாவட்ட அளவில் மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்
🌟 இம்மன்றங்களால் உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கிராம சபை:
🌟 ஒவ்வொரு ஊராட்சியிலும் 1994 ஆம் ஆண்டு முதல் மக்களாட்சிக்கு அடித்தளமாக இருப்பது ஆகும் கிராம சபை ஆகும். ஊராட்சி வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள் அனைவரும் கிராம சபையில் பங்கு பெறலாம். ஊராட்சி மன்றத்தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
🌟 ஊராட்சி செவ்வனே செயல்படவும், ஊராட்சிச் செயல்பாடுகளில் பொது மக்களின் பங்கேற்பினை அதிகரிக்கவும் கிராம சபைகள் வழிவகுக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக