திங்கள், 29 ஏப்ரல், 2019

TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II


TET - 2019,முந்தைய ஆண்டு Original வினாத்தாள் - 2017,தாள் - II

1. மாறுபட்ட அடுக்குத் தொடரைத் தேர்ந்தெடுக்க.

அ. தா தா

ஆ. தீ தீ

இ. வா வா

ஈ. போ போ

விடை: ஆ. தீ தீ

2. 'பதிற்றந்தாதி" எனும் சிற்றிலக்கிய வகையைக் குறிப்பிட்டவர் - வீரமாமுனிவர்

3. மாரன் - மாறன் என்ற பெயர்களில் சுட்டப்படுபவர்கள் யாவர்? - மன்மதன் - நம்மாழ்வார்

4. ஏவல் வினையாக வருவது ----------------. - பகுதி

5. 'ஈற்று அயலெழுத்தாகத் தனிநெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம்" - இவை பொருந்தி வரும் இலக்கணம். - குற்றியலுகரம்

6. 'வேற்றுமை --------- பண்பு ----------- உம்மை ஆகியன தொடர்நிலைத் தொடர்களாகும்". - மேற்கானும் செய்தியில் விடுபட்டுள்ள உறுப்புகளைத் தெரிவு செய்க. - வினை, உவமை

7. செப்புத் திருமேனிகளின் பொற்காலம் என்று புகழுண்டாகக் காரணமானவர்: - செம்பியன் மாதேவி

8. சிவனடியார் பின்பற்றிய உய்வு பெற்ற நெறிகளின் சரியான வரிசை முறையை எடுத்துரைக்க.

அ. அப்பர் - மகன்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - தொண்டர்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

ஆ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - மகன்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

இ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - மகன்
சம்பந்தர் - தோழர்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

ஈ. அப்பர் - தோழர்
சுந்தரர் - மகன்
சம்பந்தர் - அறிவுடையோர்
மாணிக்கவாசகர் - தொண்டர்

விடை: ஆ. அப்பர் - தொண்டர்
சுந்தரர் - தோழர்
சம்பந்தர் - மகன்
மாணிக்கவாசகர் - அறிவுடையோர்

9. அழைத்தி - என்பதன் இலக்கணக் குறிப்பு தருக. - முன்னிலை ஒருமை வினைமுற்று

10. வினைமுற்று, பெயர்ச் சொல், வினைச் சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது - முதல் வேற்றுமை

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக