ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)
அறிதல் திறன் வளர்ச்சி:
🌟 ஒருவர் தனது சுற்றுப்புறச் சு%2Bழலைப் புரிந்துகொள்ளக் கூடியத் திறன் வளர்ச்சியை அறிதல் திறன் வளர்ச்சி என்று கூறுகின்றோம்.
🌟 இதற்கு நம் புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி பயன்படுகின்றன. புலன்களினால் பெறப்படும் தூண்டல்கள் அனுபவிக்கப்பட்டு நினைவாக வடிவம் பெறுகின்றன.
🌟 இவற்றை வரிசைப்படுத்துதல், பகுத்தல், தொகுத்தல், பொதுமைப்படுத்துதல், சிந்தித்தல், காரண காரியம் அறிதல், எண்ணங்கள், பிரச்சனைக்குத் தீர்வு காணல் போன்ற மனத்திறன்களின் உதவியோடு அறிதல் திறன் வளர்ச்சியடைகிறது. இவ்வளர்ச்சி நிலைகள் வயது மற்றும் சு%2Bழ்நிலைகளைப் பொறுத்து குழந்தைக்குக் குழந்தை வேறுபடலாம்.
பியாஜேயின் அறிதல் திறன் வளர்ச்சி
🌟 பியாஜே என்ற அறிவியல் மேதை தன் வாழ்நாள் முழுவதும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார்.
🌟 குழந்தைகள் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதை நான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார்.
🌟 முதல் நிலை - தொட்டு உணரும் பருவம் - பிறப்பிலிருந்து 18 மாதம் வரை
🌟 இரண்டாம் நிலை - மனச்செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் 7 வயது வரை
🌟 மூன்றாம் நிலை - புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச்செயல்பாட்டு நிலை - 7 முதல் 12 வயது வரை
TRB கணினி ஆசிரியர; தேர;வுக்கு சிறப்பாக பயிற்சி பெற,
பாடத்திட்டம்(Syllabus)...
Computer Systems Architecture, Operating Systems, Data Structures... மேலும் இதுபோல பாடத்திட்டத்தின் படி ஆன்லைன் தேர;வு முறையில் பயிற்சி பெறலாம்.
வினா விடைகளாகவும் பயிற்சி பெறலாம்.
முக்கிய வினா விடைகளை Bookmark செய்யும் வசதி.. மேலும் இதுபோல அனைத்து தகவல்களும் அடங்கிய Niவாசய TRB யுpp-ஐ இலவசமாக Install செய்ய, 
இங்கே கிளிக் செய்யுங்கள்..!
🌟 நான்காம் நிலை - முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை - 12 வயதிற்கு மேல்
🌟 புலன்களால் உணர்வதை பார்ப்பதை வைத்துச் சிந்தித்துச் செயல்படும் மனச்செயல்பாட்டு நிலை:-
🌟 இப்பருவத்தில் உள்ள குழந்தைகள் பொருள்களின் தொடர்புகளை அறிந்து அவைகளின் அமைப்புகளை யோசித்துத் தங்கள் மனத்திலேயே பொருள்களின் நிலைகளை மாற்றி வைத்துப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
🌟 சந்தேகங்கள் ஏற்படும் போது பொருள்களை அல்லது அவற்றின் அமைப்புகளை மாற்றி வைத்துக் கண்கூடாகப் பார்த்து சந்தேகங்களைப் போக்கிக் கொள்கின்றனர்.
🌟 நேரடிக் கற்பித்தல், முறைப்படுத்தப்படாத அனுபவங்கள் மற்றும் முதிர்ச்சியின் காரணமாகத் தங்களுடைய கருத்துக்களில் மாற்றங்களைக் கொண்டுவர முயல்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக