செவ்வாய், 30 ஏப்ரல், 2019

அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு...!


அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்திவைப்பு...!

👉 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்க பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

👉 கடந்த 2011ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 3,000-க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

👉 அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் 5 ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.

👉 இந்த 5 ஆண்டுகளில் 10 முறை தேர்வு எழுத அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். ஆனால், அரசு இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே தேர்வு நடத்தியுள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவது தொடர்பாக ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படவில்லை.

👉 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு அம்சமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கமே தரமான கல்வியை வழங்க வேண்டும் என்பதே.

👉 அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுகள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. மேலும், 2019-ம் ஆண்டில் தேர்ச்சி பெறாதவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

👉 'ஆசிரிய பணியே அறப்பணி, அதற்கே உன்னை அர்ப்பணி" என ஆசிரியர்கள் தங்களின் வாழ்க்கையையே மாணவர்களின் எதிர்காலத்துக்காக தியாகம் செய்கின்றனர்.

👉 இந்த நிலையில் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு டெட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நித்ரா TET செயலியை மேலும் மேம்படுத்த, எங்களுக்கு 5 நட்சத்திர குறியீடுகளை வழங்கி ஊக்குவியுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக