திங்கள், 22 ஏப்ரல், 2019

சர்தார் வல்லபாய் படேல் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒற்றுமை சிலையின் சிறப்பம்சங்கள்..!!


 சர்தார் வல்லபாய் படேல் பற்றிய முந்தைய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.ஒற்றுமை சிலையின் சிறப்பம்சங்கள்..!!

🗿ஒற்றுமை சிலையானது 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டாலும், எந்த சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

🗿இந்த சிலையானது ஒரு நொடிக்கு 60 மீட்டர் அளவுக்கு வீசும் காற்றின் எடையினை தாங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


🗿வல்லபாய் படேல் சிலையின் உட்பகுதி காங்கிரீட் கலவையிலான கட்டுமானம் கொண்டது. சிலையின் வெளிப்பகுதி பித்தளை தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

🗿பத்ம பூஷண் விருது பெற்ற சிற்பி ராம் வி.சுடர் இந்த சிலையை வடிவமைக்கும்போது படேல் சிலையில் சிறப்பு கவனம் செலுத்தி அமைத்துள்ளதாகவும், வல்லபாய் படேலின் 2 ஆயிரம் புகைப்படங்களை வைத்து அவரின் முக அமைப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளார்.


🗿சிலையின் உட்பகுதி வழியாக மேலே செல்வதற்கு இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 2 லிப்டுகள் மூலம் ஒவ்வொன்றிலும் ஒரே நேரத்தில் தலா 40 பேர் வரை செல்ல முடியும்.

🗿மேலும் சிலையின் மார்பு பகுதியில், அதாவது 501 அடி உயரத்தில் பார்வையாளர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த 501 அடி உயரத்தில் 200 பேர் வரை நின்று இயற்கைக் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

🗿சிலையின் அடித்தளம் 20,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அடித்தளத்தில் 52 அறைகள் கொண்ட 3 நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளன. மேலும் அடித்தளத்தில் கண்காட்சி அரங்கம், நினைவுப்பூங்கா, உணவுக்கூடங்கள் என பல அமைக்கப்பட்டுள்ளன.

🗿செல்ஃபி புகைப்படம் எடுப்பதற்காக இந்த இடத்தின் அருகில் பல 'செல்ஃபி பாயிண்ட்" அமைக்கப்பட்டுள்ளன.

'நாடு உனக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்காதே, நீ நாட்டுக்கு என்ன செய்ய முடியும் என்று கேள்" என்று முழங்கிய மாமனிதர்.

அமெரிக்க மக்கள் மட்டுமல்லாமல் உலக மக்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். போரை வென்றதற்காக அல்லாமல் போரைத் தவிர்த்ததற்காக நாட்டு மக்களால் புகழப்பட்டவர்.

பொறுப்பில் இருந்தது மொத்தம் இரண்டு ஆண்டுகள் பத்து மாதங்கள் இரண்டு நாட்கள் மட்டுமே. அந்தக் குறுகிய காலத்திற்குள் அவர் இந்நாட்டுக்கு சுய கௌரவம், தைரியம், பெருமிதம் ஆகியவற்றை பெற்றுத்தந்தவர்.

யார் இவர்?... யோசித்துக்கொண்டே இருங்கள்... இனி வரும் பகுதிகளில் காணலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக