TET EXAM - 2019
பொதுத்தமிழ் - இலக்கணப்பகுதி 027
சொற்றொடர் வகைகள்:-
1. கயல்விழி பாடத்தைப் படித்தாள் என்பது --------- தொடர். - செய்வினை
2. கீழ்க்கண்டவற்றில் எது விழைவுத் தொடர்?
அ) கமலா பரிசு பெற்றாளா?
ஆ) நீடூழி வாழ்க
இ) உழைத்துப் பிழை
ஈ) பாடம் படித்தாயா?
விடை: ஆ) நீடூழி வாழ்க
3. ′என்னே தமிழின் இனிமை!′ என்பது எவ்வகைத் தொடர்? - உணர்ச்சி தொடர்
4. ′கலையரசி துணியைத் தைத்தாள்′ என்பது எவ்வகைத் தொடர்? - செய்வினைத் தொடர்
5. ′முயற்சி திருவினையாக்கும்′ - எவ்வகைத் தொடர்? - செய்தித் தொடர்
6. ஓவியம் மாறனால் வரையப்பட்டது - எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை
7. ஆசிரியர் பாடத்தை நடத்தினார் என்பது --------- - செய்வினைத் தொடர்
8. ′தென்னை மரத்திற்கு கிளைகள் இல்லை′ - என்பது -------------. - செய்தித் தொடர்
9. பாரி கபிலரால் போற்றப்பட்டார் - என்பது எவ்வகைத் தொடர்? - செயப்பாட்டு வினை
10. இந்தச் செயலைச் செய்தது யார்? என்பது எவ்வகைத் தொடர்? - வினாத் தொடர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக