புதன், 24 ஏப்ரல், 2019

TET Exam 2019, சுழ்நிலையியல் 014


TET Exam 2019, சுழ்நிலையியல் 014

பசுமைப் பரப்புகள்:

🌟 பு%2Bமியில் காற்று, நீர், சு%2Bரிய ஒளி ஆகியன இயற்கையில் கிடைக்கின்றன. இவற்றின் உதவியோடு மனித முயற்சியின்றி தாமே தோன்றி வளரும் தாவரங்கள் இயற்கைத் தாவரங்கள் எனப்படும்.

🌟 இயற்கைத் தாவரங்களின் வளர்ச்சி அங்குள்ள மண்வளம், நீர்வளம், சு%2Bரியஒளி, காலநிலை ஆகியவற்றைப் பொருத்து இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன.

🌟 ஆண்டு முழுவதும் மழை பெறும் பகுதிகள் பல உள்ளன. அங்கு அடர்ந்த உயரமான மரங்களுள்ள காடுகள் காணப்படுகின்றன. சில இடங்கள் அதிக மழை பெறுகின்றன.

🌟 வறட்சிக் காலத்தில் காய்ந்து, மழைக்காலத்தில் தளிர்க்கும் தன்மை வாய்ந்தவை புல் வகைகள், சிறுசெடிகள் ஆகும். குறைவான மழை பெய்யும் இடங்களில் அங்கங்கு முட்புதர்களைத் தவிர வேறு வகைத் தாவர இனங்கள் காணப்படுவதில்லை.

காடுகள்:

🌟 மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள பெரிய நிலப்பரப்புகள் காடுகள் எனப்படும். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வளர்ந்துள்ள காடுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

🌞 பசுமைமாறாக் காடுகள்

🌞 இலையுதிர்க் காடுகள்

🌞 சதுப்புநிலக் காடுகள்

🌞 முட்புதர்க் காடுகள்

🌞 மலைக்காடுகள்.

பசுமைமாறாக் காடுகள்:

🌟 இக்காடுகள் ஆண்டு முழுவதும் பசுமையாகக் காணப்படுகின்றன. இவை வளர மிகுந்த வெப்பமும், அதிக மழையும் தேவை. இக்காடுகளில் வளரும் மரங்கள் உயரமும், வலிமையும் மிக்கவை.

இலையுதிர்க் காடுகள்:

🌟 இக்காடுகளில் உள்ள மரங்கள் ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் இலைகளை உதிர்த்து விடுகின்றன. மிதமான மழை பெறும் பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.

🌟 இங்கு வளரும் மரங்கள் பசுமைமாறாக் காடுகளைப் போல் அடர்ந்து வளருவதில்லை. மரங்கள் இலைகளை உதிர்ப்படால் நீராவிப் போக்கைத் தவிர்த்து நீர் இழப்பினைச் சரி செய்து கொள்கின்றன. இவ்வகை மரங்கள் மரச்சாமான்கள் செய்யப் பயன்படுகின்றன. இவை பருவக்காற்றுக் காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.

சதுப்புநிலக் காடுகள்:

🌟 கடற்கரைச் சமவெளிகள் மற்றும் ஆற்றின் கழிமுகச் சந்திப்புள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் வளர்க்கின்றன. இக்காடுகளில் சுந்தரிவகை மரங்கள் வளர்வதால் இவை சுந்தர வனங்கள் எனப்படுகின்றன.

🌟 நீரில் மிதக்கும் சுந்தரிப் பழங்களின் விதைகள் முளைத்து வேரூன்றி வளர்ந்து ஒரு வனமாக உருவாகின்றது. இவை, நீர் அலைகளால் ஏற்படும் மண் அரிப்பைத் தடுத்து வளமிக்க வண்டல் மண் கடலைச் சென்றடையாமல் பாதுகாக்கிறது. இவ்வகை மரங்கள் மிதவைகள், கட்டுமரம், படகுகள் செய்ய மிகவும் ஏற்றவை.

முட்புதர்க் காடுகள்:

🌟 இவை மழை மிகவும் குறைவாகப் பெய்யும் பகுதிகளில் வளர்கின்றன. வறட்சியைத் தாங்கும் இயல்புடையவை. மரங்கள் குட்டையாக, முட்கள் நிறைந்து நீண்ட வேர்களுடன் வளர்கின்றன.

மலைக்காடுகள்:

🌟 மலைகளில் காணப்படும் காடுகள் மலைக்காடுகள் எனப்படுகின்றன. இவை மலைகளின் உயரத்திற்கு ஏற்ப வேறுபட்டுக் காணப்படுகின்றன.

🌟 மலை உச்சிகளில், பனிப்பொழிவு மிகுந்த இடங்களில் கூர்மையான கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படுகின்றன. இவற்றின் இலைகள் ஊசிபோல் மெலிந்து காணப்படுவதால், இவை ஊசியிலைக் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக