ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)
ஆக்கத்திறனை வளர்க்கும் முறைகள்:-
🌟 வகுப்பறையில் பாடச் செயல்கள் செய்யும் போது மாணவர்களைச் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தல்.
🌟 களிமண்ணினால் பல்வேறு உருவங்களைச் செய்ய உதவுதல்.
🌟 எழுத்துக்களை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு உருவங்களாக மாற்றச் செய்தல்.
🌟 அறிவியல் கண்காட்சிகள் அமைத்து மாணவர்களின் அறிவியல் மனப்பான்மைகளை வளர்த்தல். இது பிற்காலத்தில் ஆக்கக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும்.
🌟 காகித வேலைபாடுகள், ஓவியம் வரைதல், வண்ணம் தீட்டுதல், பொருத்து அட்டைகளைக் கொண்டு உருவங்கள் உருவாக்குதல் போன்றவை அழகுணர்ச்சியைத் தூண்டி ஆக்கத்திறனை வளர்க்கும்.

காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
🌟 கணினி விளையாட்டுகள், மின்னணு விளையாட்டுகள், சதுரங்க விளையாட்டுகள் போன்றவை நிதானத்தையும் சிந்திக்கும் திறனையும் மேம்படுத்தி ஆக்கத்திறனுக்கு அடிப்படையாக அமையும்.
🌟 குழந்தைகளை அடிக்கடி சுதந்திரமாக வினா எழுப்பச் செய்து உடனுக்குடன் சரியான விடை பகர்வதால் கற்றலிலும் சிந்திப்பதிலும் ஊக்கம் பிறக்கிறது. ஊக்கம் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு உரமாக அமையும்.
🌟 விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களின் புலனுறுப்புகள் சுறுசுறுப்புடன் செயல்படும் தன்மையைப் பெறுகிறது. சுறுசுறுப்பு ஆக்கத்திறனுக்கு அத்தியாவசியமாகிறது.
🌟 களப் பயணங்கள், கல்விச் சுற்றுலா போன்றவை வகுப்பறைச் சோர்விலிருந்து விடுபட்டு சுதந்திர உணர்வைத் தருகிறது. சுதந்திர உணர்வு ஆக்கத் திறனைப் பெற உதவும்.
🌟 நு}லகத்தில் தனிமையில் அமர்ந்து புத்தகத் துணையுடன் சிந்திக்கும் பழக்கம் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
🌟 நியு%2Bட்டன், ஐன்ஸ்டீன், பாரடே, சர்.சி.வி.ராமன் போன்ற அறிவியல் மேதைகள் தங்களது ஆசிரியர்களுக்கு தெரியாததை ஆக்கச் சிந்தனையின் துணைக்கொண்டு கண்டுபிடித்துள்ளனர் என்றால் அது மிகையாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக