செவ்வாய், 16 ஏப்ரல், 2019

TET Exam - 2019 கணித வினா விடைகள் 008



TET Exam - 2019 
கணித வினா விடைகள் 008

1. இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1. அவற்றில் ஒரு எண் 5/20 எனில் மற்றொரு எண் யாது?

விடை: 3/4

விளக்கம்:

இரு விகிதமுறு எண்களின் கூடுதல் = 1

கொடுக்கப்பட்ட எண் %2B தேவையான எண் = 1

5/20 %2B தேவையான எண் = 1

தேவையான எண் = 1 - 5/20

= 20 - 5 ஃ 20

= 15/20

= 3/4


காவலர் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. ஒரு மகிழ்விந்து 129.92கி.மீ தொலைவை 3.2 மணி நேரத்தில் கடக்கிறது. ஒரு மணி நேரத்தில் அது கடக்கும் தொலைவு எவ்வளவு?

விடை: 40.6கி.மீ

விளக்கம்:

மகிழ்வுந்துவால் கடக்கப்பட்ட தொலைவு = 129.92கி.மீ

இந்த தொலைவை கடக்கத் தேவையான நேரம் = 3.2 மணி

ஆகையால், 1 மணி நேரத்தில் அது கடந்த தொலைவு = 129.92 ஃ 3.2

= 1299.2ஃ32

= 40.6கி.மீ
3. ஒரு செவ்வகத்தின் நீளம் 6.3செ.மீ மற்றும் அதனுடைய அகலம் 3.2செ.மீ ஆக இருக்கிறது. செவ்வகத்தின் பரப்பு என்ன?

விடை: 20.16செ.மீ2

விளக்கம்:

செவ்வகத்தின் நீளம் = 6.3செ.மீ

செவ்வகத்தின் அகலம் = 3.2செ.மீ

செவ்வகத்தின் பரப்பு = நீளம் * அகலம்

= 6.3 * 3.2 = 20.16செ.மீ2



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக