ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
சுழ்நிலையியல் - நமது மாநிலம் 007
🌟 இந்தியாவின் மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. தமிழ்நாடு மிகவும் பழமை வாய்ந்தது. தமிழ்நாடு சங்ககாலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களால் ஆளப்பட்டது.
🌟 இந்தியா சுதந்தரம் பெற்ற பிறகு தமிழ்நாடு, சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டுத் துறைகளில் முன்னேறி தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
🌟 இந்தியா சுதந்தரம் அடைந்த போது, தமிழ்நாடு, சென்னை மாகாணம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. அது இப்பொழுதுள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது.
🌟 கி.பி.1956இல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது சென்னை மாநிலம் என்று பெயர் சு%2Bட்டப்பட்டது.
🌟 பின்னர், கி.பி,1968இல் இயற்றப்பட்ட சென்னை மாநிலப் பெயர் மாற்றச் சட்டத்தின்படி 14.01.1969இல் சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று அப்போதைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களால் பெயர் மார்றம் செய்யப்பட்டது.
🌟 தமிழ்நாடு, இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் நிலப்பரப்பளவில் பதினோராவது பெரிய மாநிலமாகும். தமிழகம் இந்திய நிலப்பரப்பளவில் 4மூ இடத்தைக் கொண்டுள்ளது.
🌟 நம் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் செம்மொழியான தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்.
🌟 தமிழ்நாடு மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளது. இது ஏறக்குறைய 1000கி.மீ. வரை நீண்டுள்ளது. தமிழ்நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இங்கு அரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்று கடல்களும் சந்திக்கின்றன.
எல்லைகள்:
🌟 கிழக்கு - வங்காள விரிகுடா
🌟 மேற்கு - கேரளா
🌟 வடக்கு - ஆந்திரா, கர்நாடகம்
🌟 தெற்கு - இந்தியப் பெருங்கடல் ஆகியவை தமிழ்நாட்டின் எல்லைகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்கள்:
🌟 ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், கேரளம் ஆகியவை தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக